பொது செய்தி

இந்தியா

சபரிமலை பக்தர்களுக்கு கட்டுப்பாடு அய்யப்ப சேவா சமாஜம் கண்டனம்

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
கோவை-'சபரிமலை பக்தர்களுக்கு, கேரள அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அவற்றை விலக்கிக் கொள்ளா விட்டால், நாடு முழுதும் உள்ள பக்தர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்' என, சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் அறிவித்துள்ளது.சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் தேசிய செயற்குழு கூட்டம், கோவை எட்டிமடை அமிர்தா கல்லுாரியில், நேற்று துவங்கியது. இரண்டு நாட்கள் நடக்கும்

கோவை-'சபரிமலை பக்தர்களுக்கு, கேரள அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அவற்றை விலக்கிக் கொள்ளா விட்டால், நாடு முழுதும் உள்ள பக்தர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்' என, சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் அறிவித்துள்ளது.



latest tamil news



சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் தேசிய செயற்குழு கூட்டம், கோவை எட்டிமடை அமிர்தா கல்லுாரியில், நேற்று துவங்கியது. இரண்டு நாட்கள் நடக்கும் கூட்டத்துக்கு, சமாஜத்தின் துணைத் தலைவர் குமார் தலைமை வகித்தார். தேசிய பொதுச் செயலர் ராஜன், அறங்காவலர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர்.தீர்மானங்கள் விபரம்:தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, சபரிமலை செல்லும் பக்தர்கள் எரிமேலி யாத்திரைக்கு வரும்போது, யாத்திரை ஒன்றுக்கு ஐந்து நபர்களை மட்டுமே அனுமதிக்கின்றனர்.


latest tamil news


இதை கண்டிப்பதோடு, அதிக பக்தர்களை அனுமதிக்க வேண்டும்.பம்பையில் பக்தர்கள் நீராடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும். சபரிமலை சன்னிதானத்தில் நடக்கும் நெய் அபிஷேகத்தில், பக்தர்கள் தரிசிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும்.கேரள சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகள், சபரிமலை பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை வைக்கின்றனர்.அவற்றை விலக்கிக் கொள்ள வேண்டும். இதே நிலை நீடித்தால், நாடு முழுதும் பக்தர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இன்றும், செயற்குழு நடக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani - Chennai,இந்தியா
10-நவ-202106:57:41 IST Report Abuse
Mani எல்லாருக்கும் பக்தி கண்டிப்பாக வேண்டும் வாழ்க்கை என்னும் சக்கரம் சுழன்ற அது அவரவர் பாதையில் இருக்க வேண்டுமென அடியேனின் தாழ்மையான வேண்டுகோள்.
Rate this:
Cancel
08-நவ-202116:47:41 IST Report Abuse
அப்புசாமி அய்யப்ப சேவா சமாஜம் பேரில் உள்ளூரில் அன்னதான பிரபுவின் பேரில் அன்னதானம் பண்ணுங்க. அககம்.பக்கத்து தெரு, சாக்கடைகளை சுத்தமாக வையுங்க. சபரிமலை எங்கும் போயிடாது. அடுத்த வருஷம் போய்க்கலாம்.
Rate this:
Cancel
RAJAN -  ( Posted via: Dinamalar Android App )
08-நவ-202115:14:49 IST Report Abuse
RAJAN KERALA ANDHRA TAMILNADU மூன்று தென்மாநிலங்களிலும் கிறிஸ்துவ ராஜ்யம் நடந்து கொண்டுள்ளதை ஐய்யப்ப பக்தர்கள் கவனித்தில் கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X