காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், எரிபொருள் மீதான வரியை குறைத்துள்ளனரா | Dinamalar

பொது செய்தி

இந்தியா

'காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், எரிபொருள் மீதான வரியை குறைத்துள்ளனரா

Added : நவ 08, 2021
Share
பெங்களூரு : ''காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களில், எரிபொருள் மீதான வரியை குறைத்துள்ளனரா அல்லது குறைப்பார்களா என்பதை அக்கட்சி தலைவர்கள் ராகுல், சித்தராமையாவை கேட்க வேண்டும்,'' என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.டுவிட்டரில் அவர் கூறியதாவது:தேர்தலை முன் வைத்து விலையை குறைப்பது எங்களின் பழக்கமல்ல. நாடு முழுவதும், 29 தொகுதி இடைத்தேர்தல் நடந்தது. அதில் 12

பெங்களூரு : ''காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களில், எரிபொருள் மீதான வரியை குறைத்துள்ளனரா அல்லது குறைப்பார்களா என்பதை அக்கட்சி தலைவர்கள் ராகுல், சித்தராமையாவை கேட்க வேண்டும்,'' என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.

டுவிட்டரில் அவர் கூறியதாவது:தேர்தலை முன் வைத்து விலையை குறைப்பது எங்களின் பழக்கமல்ல. நாடு முழுவதும், 29 தொகுதி இடைத்தேர்தல் நடந்தது. அதில் 12 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. எரிபொருள் விலையை கட்டுக்கடங்காமல் நீட்டித்தது, காங்கிரஸ் ஆட்சியில் தானே தவிர, எங்கள் ஆட்சியில் அல்ல. சர்வதேச அளவில் எரிபொருள் உயர்வை கவனித்து, விலையை கட்டுப்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். மக்களுக்கு ஓரளவு சுமையை குறைத்துள்ளோம். ராகுல், சித்தராமையா திறமையான அரசியல்வாதி. இருவரும் தெளிவில்லாதவர் போன்று பேசக்கூடாது. நாட்டில் மக்களுக்கான பணிகள் நடந்துள்ளது. உணவு தானியங்கள், கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும்.

இதற்கு பணம் தேவை. இதற்கிடையிலும் விலையை குறைத்துள்ளோம். எங்கு தேர்தல் நடந்தாலும், அமைச்சர்கள் செல்வது சகஜம். நஞ்சன்கூடு, பிரியாபட்டணாவில் தேர்தல் நடந்த போது, சித்தராமையா செல்லவில்லையா. சிந்தகி, ஹனகல் இடைத்தேர்தலில், பா.ஜ.,வுக்கு 53 சதவீதம் ஓட்டுகள் வந்துள்ளது.தோல்வியடைந்தால் மனம் தளரும் சிந்தாந்தம் எங்களுக்கில்லை. தோல்வி என்றால், அது காங்கிரஸ் அடைந்த தோல்வி தான். எதிர்க்கட்சியாக அமரவும் தகுதி பெறவில்லை. அதுதான் தோல்வி. 4,000 ஓட்டுகள் வித்தியாசத்தால் தோல்வியடைந்ததால் அது தோல்வியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X