அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசியல் வாழ்க்கையை அழித்து விடுவேன் தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு வைகோ மிரட்டல்

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021 | கருத்துகள் (63)
Share
Advertisement
மருத்துவமனை அமைப்பது தொடர்பாக ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவுக்கும், தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. 'என் சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை வராவிட்டால், உன் அரசியல் வாழ்க்கையை அழித்து விடுவேன்' என வைகோ மிரட்டியதால், எம்.எல்.ஏ., அதிர்ச்சி அடைந்து உள்ளார்.கடந்த 30 ஆண்டுகளாக, அ.தி.மு.க., கோட்டையாக இருந்த

மருத்துவமனை அமைப்பது தொடர்பாக ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவுக்கும், தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. 'என் சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை வராவிட்டால், உன் அரசியல் வாழ்க்கையை அழித்து விடுவேன்' என வைகோ மிரட்டியதால், எம்.எல்.ஏ., அதிர்ச்சி அடைந்து உள்ளார்



latest tamil news



.கடந்த 30 ஆண்டுகளாக, அ.தி.மு.க., கோட்டையாக இருந்த சங்கரன்கோவில் சட்டசபை தொகுதி தற்போது தி.மு.க., வசமாகி உள்ளது.எனவே, அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, தொகுதியை தக்க வைக்க, அதன்எம்.எல்.ஏ.,வான ராஜா கவனம் செலுத்தி வருகிறார். 'குருவிகுளம் ஒன்றியம், சாயமலை கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையாக மாற்றினால், 30 கிராம மக்கள் பயன்பெறுவர்' என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் ராஜா மனு அளித்தார். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு, ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையாக மாற்ற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அதேநேரத்தில், சாயமலைக்கு பதிலாக, கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தும்படி, வைகோ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.இது, அதிகாரிகளுக்கு தர்ம சங்கடமானது. ஆனால், மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையை சாயமலைக்கு கொண்டு செல்ல, எம்.எல்.ஏ., ராஜா உறுதியாக இருந்ததால், அவர் மீது வைகோ கடும் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து, ராஜாவை தொடர்பு கொண்ட வைகோ, 'என்னை எதிர்த்து நீ அரசியல் செய்கிறாயா; எனக்கே அரசியல் சொல்லி தருகிறாயா; உன் அரசியல் வாழ்க்கையை தொலைத்து விடுவேன். 'கலிங்கப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 15 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளேன். எங்க ஊருக்கு தான் மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை வந்தாக வேண்டும்' என்று மிரட்டி உள்ளார்.


latest tamil news


அதிர்ச்சி அடைந்த ராஜா, 'தொகுதி மக்களின் கோரிக்கை அடிப்படையில் தான், சாயமலை ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த கேட்டேன்' என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் தென்காசி மாவட்ட தி.மு.க.,வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தென்காசி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், இந்த விவகாரத்தில் தலையிட்டு, மருத்துவமனை சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என, ஆளுங்கட்சியினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
09-நவ-202115:49:23 IST Report Abuse
Vijay D Ratnam எங்க தளபதியல்தான் இவருக்கே பொழப்பே ஓடிட்டு இருக்குது. இவரு இன்னொருத்தர் அரசியல் வாழ்க்கையை முடிச்சிடுவாராம். சைக்கோ. வாயி வாயி வாயி, வாயில்லேன்னா நாய் கூட மதிக்காது.
Rate this:
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
09-நவ-202113:34:32 IST Report Abuse
Ramalingam Shanmugam உனக்கே எதிர்காலம் இல்லை நீ ஒரு செல்லா காசு நீ பொய் கட்டிப்புடி அவன் பஸ்பம் ஆகி விடுவான்
Rate this:
Cancel
08-நவ-202116:43:53 IST Report Abuse
 kulandai kannan வைகோ கட்டிப் பிடித்தாலே, அந்த எம்.எல்.ஏவுக்கு அஸ்தமனம்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X