பொது செய்தி

தமிழ்நாடு

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழை

Added : நவ 08, 2021
Share
Advertisement
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று இரவு வரை, பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில், மழை நீர் தேங்கியுள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி, கடம்பத்துார், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பூண்டி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில், நேற்று இரவு வரை தொடர்ந்து மழை பெய்தது.இதனால், தாழ்வான


திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று இரவு வரை, பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில், மழை நீர் தேங்கியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி, கடம்பத்துார், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பூண்டி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில், நேற்று இரவு வரை தொடர்ந்து மழை பெய்தது.இதனால், தாழ்வான பகுதிகள், சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கி உள்ளது. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

தொடர் மழை காரணமாக, இயல்பு வாழ்க்கை பாதித்தது.நேற்று மாலை வரை, மாவட்டத்தில் அதிகபட்சமாக சோழவரத்தில,11.4 செ.மீ., மழையும்; குறைந்தபட்சமாக, ஜமீன் கொரட்டூரில், 2.1 செ.மீ., மழையும் பதிவாகி உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக செம்பரம்பாக்கத்தில் 5.2 செ.மீ., மழையும், குறைந்தபட்சமாக வாலாஜாபாத்தில் 0.1 செ.மீ., மழையும் பதிவாகி உள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 5.7. செ.மீ., மழையும், மதுராந்தகத்தில் 0.6 செ.மீ., மழையும் பதிவாகி உள்ளது.

- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X