சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை

Added : நவ 08, 2021
Share
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு துவங்கி, நேற்று காலை வரை விடிய விடிய பெய்த கனமழையால், தமிழகத்தின் தலைநகரம் தண்ணீரில் தத்தளிக்கிறது. 2015ம் ஆண்டுக்குப் பின், சென்னையில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, மயிலாப்பூரில், 23 செ.மீ., கனமழை கொட்டி தீர்த்தது. பருவமழையை எதிர்கொள்ள, மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு துவங்கி, நேற்று காலை வரை விடிய விடிய பெய்த கனமழையால், தமிழகத்தின் தலைநகரம் தண்ணீரில் தத்தளிக்கிறது. 2015ம் ஆண்டுக்குப் பின், சென்னையில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, மயிலாப்பூரில், 23 செ.மீ., கனமழை கொட்டி தீர்த்தது. பருவமழையை எதிர்கொள்ள, மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், திடீர் கனமழையால், சென்னை ஸ்தம்பித்தது. கனமழையால் பாதிக்கப்பட்டோரை மீட்கவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும்,

பல்துறை அதிகாரிகள் கைகோர்த்து களம் இறங்கியுள்ளனர். தமிழகத்தில், கடந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை துவங்கியது. பருவமழை துவங்குவதற்கு முன்பே, சென்னை மாநகராட்சி சார்பில், வடிகால் துார்வாரும் பணி, கால்வாய்களை அகலப்படுத்துதல், நீர்நிலை பராமரிப்பு, சாலை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, வார்டு வாரியாக கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட முக்கிய நீர் நிலைகளில் நீர் வரத்து மற்றும் இருப்பு நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென கனமழை பெய்ய துவங்கியது. சில மணி நேரங்களில் மிக கனமழையாக மாறிய நிலையில், இரவு முழுவதும் விடாமல் கொட்டி தீர்த்தது. விடிய விடிய பெய்த கனமழையால், சாலைகளில் மழை நீர் தேங்கியது.சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்ததால், மாவட்ட கலெக்டர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உபரி நீர் திறப்பு குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், விடிய விடிய பெய்த கனமழையால், நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி, சென்னை மயிலாப்பூரில், 24 மணி நேரத்தில், 23 செ.மீ., மழை கொட்டி தீர்த்தது. இது, 2015ம் ஆண்டுக்குப் பின், சென்னையில் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழையாக பதிவானது. அதே போல், நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிக கனமழை பெய்தது. சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்துாரில், 21 செ.மீ., - அயனாவரத்தில் 18 செ.மீ., மற்றும் மீனம்பாக்கத்தில் 11 செ.மீ., கனமழை கொட்டியது. இதனால், சென்னை நகரின் பிரதான சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

ரயில் நிலைய தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல சுரங்கப்பாதைகள் நீரில் மூழ்கியதால், சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. அசம்பாவிதங்கள் தவிர்க்க பல பகுதிகளில் மின் தடை அமல்படுத்தப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி, தி.நகர், முகப்பேர், சூளைமேடு, வியாசர்பாடி, பெரம்பூர், ஆழ்வார்பேட்டை, அண்ணாநகர், அம்பத்துார், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், திருவொற்றியூர், சைதாப்பேட்டை, கோயம்பேடு, அசோக்பில்லர், வில்லிவாக்கம், மெரினா, பட்டினப்பாக்கம், மெரினா, மந்தைவெளி, கிண்டி, நுங்கம்பாக்கம், கே.கே.நகர், அண்ணாநகர் உள்ளிட்ட பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதித்தது. மருத்துவமனை உள்ளிட்ட அவசர தேவைக்கு சென்ற வாகனங்கள் அவதிக்குள்ளாகின. வேளச்சேரி, மடிப்பாக்கம், புளிந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

பல இடங்களில் தீயணைப்பு நிலைய வீரர்கள் களம் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர். வில்லிவாக்கத்தில் மழைநீர் தேங்கியதால் 40 டிரான்ஸ்பார்மர்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டிய வால்டாக்ஸ் சாலை, எழும்பூர், ராயபுரம், தண்டையார்பேட்டை சாலைகள் கடும் பாதிப்படைந்தன, ஜி.என்.செட்டி சாலை, சென்ட்ரல் அருகே உள்ள முத்துசாமி சாலை, ஜெமினி மேம்பாலத்தை சுற்றியுள்ள சாலைகளிலும் வெள்ளம் சூழ்ந்தது. இதே போல், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. அரசு அதிகாரிகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்ட நிலையிலும், தொடர் கனமழை காரணமாக தலைநகரம் தத்தளிக்கும் நிலை உருவாகியுள்ளது.

சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே, பருவமழை மேலும் தீவிரம் அடையும் நிலையில், அதிக பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளில் பல்துறை அதிகாரிகள் கைகோர்த்து களம் இறங்கியுள்ளனர். 6 சுரங்கப்பாதைகள் மூடல்வாகனங்கள் பயணிக்க முடியாதபடி மழைநீர் அதிக அளவில் தேங்கிய சாலைகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து போலீசார் தடுப்புகள் அமைத்து மூடினர். நேற்று காலையிலே தி.நகர் துரைசாமி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, வில்லிவாக்கம், ஈ.வி.ஆர்., சாலை கங்குரெட்டி, வியாசர்பாடி, கணேசபுரம் உள்ளிட்ட ஆறு சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன.

மேலும் ஈ.வி.ஆர்., சாலையில் சென்ட்ரல் ரயில்வே சந்திப்பில் இருந்து நாயர் சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் ஈ.வி.ஆர்., சாலை காந்த இர்வீன் சந்திப்பு வழியாக எழும்பூர் நோக்கி திருப்பி விடப்பட்டது.* பேந்தியன் ரவுண்டானாவில் இருந்து ராஜரத்தினம் மைதானம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அவ்வாகனங்கள் பாந்தியன் சாலை வழி செல்லலாம்.* ஆற்காடு சாலை 80 அடி சாலையில் இருந்த ராஜமன்னார் சாலை செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மேம்பாலத்தில் 'கார் பார்க்கிங்'வேளச்சேரியில், குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தால், அப்பகுதி மக்கள் தங்கள் கார்களை பாதுக்காக்க அவற்றை, ரயில்வே மேம்பாலத்திலும், 1ம் தேதி புதிதாக திறந்து வைக்கப்பட்ட இரட்டை மேம்பாலத்திலும் நிறுத்தி வைத்துள்ளனர். மழை நீர் வடிந்த பிறகே தங்கள் வாகனங்களை அங்கிருந்து கீழிறக்குவோம் என அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், மேம்பலாங்கள், கார் பார்க்கிங் போல் காட்சி அளிக்கின்றன.அவசர எண் வெளியீடு சென்னையில் மழைக்கால அவசர தேவைக்கு மாநகராட்சியின் கீழ்காணும் உதவி எண்களை அழைக்கலாம்.
1913; 044 - 2561 9206; 2561 9207; 2561 9208; வாட்ஸ் ஆப் எண்: 94454 77205மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் எண்கள்:மண்டலம் - பெயர் - மொபைல் போன் எண்கள் - தொலைபேசி எண்கள்திருவொற்றியூர் - சரவண குமார் ஜடாவத் - 90959 77777 - 2854 4730மணலி - பி.கணேசன் - - 98421 85758 - 2495 2414மாதவரம் - சந்தீப் நந்துாரி - 99400 22220 - 2533 3555தண்டையார்பேட்டை - டி.ஜி.வினய் - 93427 14506 - 2851 1210ராயபுரம் - மகேஷ்வரி ரவிகுமார் - 99525 53355திரு.வி.க.நகர் - எம்.பிரதீப் குமார் - 95660 84473அம்பத்துார் - எஸ்.சுரேஷ்குமார் - 94454 77820 - 2854 4545அண்ணா நகர் - எஸ்.பழனிசாமி - 94431 76657 - 2567 4620தேனாம்பேட்டை - கே.ராஜாமணி - 94450 21688 - 2852 2113கோடம்பாக்கம் - எம்.விஜயலக்ஷ்மி - 94440 34855 - 2567 6902வளசரவாக்கம் - இளம்பகவந்த் - 94999 73445 - 2951 0802ஆலந்துார் - எல்.நிர்மல்ராஜ் - 94431 33762 - 2250 1158அடையாறு - எஸ்.மலர்விழி - 94899 00200 - 2952 0142பெருங்குடி - எஸ்.சரணவனன் - 80125 88602 - 2431 1354சோழிங்கநல்லுார் - கே.வீர ராகவ ராவ் - 89039 69999 - 2250 1525மீட்பு பணியில் 27,000 பேர்இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை என, 27 ஆயிரம் பேர் வெள்ள தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 169 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. 17 சமையற் கூடங்களில் ஒரு வேளைக்கு, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவு சமைத்து, இலவசமாக வழங்கப்படுகிறது.இதை தவிர, 407 அம்மா உணவகங்களிலும் உணவு விற்பனை தடைபடாமல் நடைபெறும்.மேலும், மாநகராட்சியின் 281 பள்ளிகளில் தாழ்வான பகுதிகளில் வசிப்போரை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் குழு -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X