தமிழ்நாடு

திருவள்ளூர், காஞ்சி, செங்கையில் 288 ஏரிகள் நிரம்பின

Added : நவ 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், சில நாட்களாக பெய்து வரும் பருவ மழையால், பொதுப்பணி மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள 288 ஏரிகள் முழுதும் நிரம்பி உள்ளன.பொதுப்பணித் துறை ஏரிகளை, 24 மணி நேரமும், ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 1,155 ஏரிகள், சில மாதங்களாக பெய்து
 திருவள்ளூர், காஞ்சி, செங்கையில் 288 ஏரிகள் நிரம்பின


திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், சில நாட்களாக பெய்து வரும் பருவ மழையால், பொதுப்பணி மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள 288 ஏரிகள் முழுதும் நிரம்பி உள்ளன.

பொதுப்பணித் துறை ஏரிகளை, 24 மணி நேரமும், ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 1,155 ஏரிகள், சில மாதங்களாக பெய்து வரும் தொடர் மழையால், விரைவாக நிரம்பி வருகின்றன.

பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில், கொசஸ்தலை மற்றும் ஆரணி ஆற்று பாசன பகுதியில், 574 ஏரிகள் உள்ளன. அவற்றில், நேற்றைய நிலவரப்படி, 60 ஏரிகள், நுாறு சதவீதம் நிரம்பி உள்ளன.ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் 581 ஏரிகளில், 24 ஏரிகள் முழுதும் நிரம்பி உள்ளன. குளம், குட்டை வகையில் 3,296ல், 332 முழுதும் நிரம்பி உள்ளன. ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில், 3,296 குளம், குட்டைகளும்; 581 சிறு பாசன ஏரிகளும் உள்ளன.திருவள்ளூர் மாவட்டத்தில், பெய்து வரும் பலத்த மழையால், மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை, 1077,044 - 27664177, 27666746, ஆகியவற்றில் தொடர்பு கொண்டு, தெரிவிக்கலாம்.

உதவி வேண்டுவோர், 18005997626 மற்றும் 'வாட்ஸ் ஆப்' எண், 98403 27626 மற்றும் 94443 17862 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.காஞ்சிபுரம்காஞ்சிபுரம் மாவட்டத்தில், தற்போது, 129 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. இன்னும் பல ஏரிகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் நிரம்பி வருகின்றன.

பருவமழை மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் பலத்த மழை காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிரதான ஆறுகளான பாலாறு, செய்யாறுகளில் தண்ணீர் சென்றது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதலில் தாமல் ஏரி, கடந்த மாதம் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறியது. அதே போல் திருப்புட்குழி, சோமங்கலம், பரந்துார், ஆற்பாக்கம், மதுரமங்கலம், தண்டலம், கோவிந்தவாடி, சிறுவாக்கம், திருப்புலிவனம் உட்பட, 129 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.மழை காலத்தில் பாதிப்பு ஏற்பட்டால் பொது மக்கள் உடனுக்கு உடன் தகவல் தெரிவிக்க கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள்: 044 - 27237207, 27237107,

மொபைல்போன், 'வாட்ஸ் ஆப்' எண்: 93454 40662 அறிவிக்கப் பட்டுள்ளது.செங்கல்பட்டுசெங்கல்பட்டு மாவட்டத்தில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில், 528 ஏரிகள் உள்ளன. சில தினங்களாக பெய்த கன மழையால் ஏரிகள் நிரம்பி வருகின்றன. இதில், மாவட்டத்தில், 75 ஏரிகள் முமுதும் நிரம்பி வழிகின்றன.ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் சிறிய ஏரிகள் 620ல், ஒரு ஏரி மட்டும் நிரம்பி வழிகிறது. குளங்கள் 2,512ல், 220 குளங்கள் நிரம்பி வழிகின்றன. கட்டுப்பாட்டு அறை; வாட்ஸ் ஆப் எண்; 9444272345; 044-.. 27427412… 27427414 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAJAN -  ( Posted via: Dinamalar Android App )
08-நவ-202115:34:24 IST Report Abuse
RAJAN அதிமுக ஆட்சி காலத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட கண்டிகை நீர் தேக்கம் பற்றி செய்தியே இல்லை. திரும்பத் திரும்ப பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் மட்டுமே செய்திகளில் பேசப்படுகின்றன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X