பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., பிரமுகரை வழிமறித்து தாக்குதல்

Added : நவ 08, 2021
Share
Advertisement
போரூர் : தி.மு.க., பிரமுகர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து, போரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல், தெள்ளியார் அகரம் பகுதியைச் சேர்ந்தவர், குமார், 40. தி.மு.க., ஒன்றிய பிரதிநிதியாகவும், அரசு ஒப்பந்ததாரராகவும் உள்ளார். இவர், கட்டடங்கள் மற்றும் சாலை அமைக்கும் பணிகளை, ஒப்பந்தம் எடுத்து செய்து வந்தார். நேற்று காலை, போரூர் அருகே இருசக்கர

போரூர் : தி.மு.க., பிரமுகர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து, போரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல், தெள்ளியார் அகரம் பகுதியைச் சேர்ந்தவர், குமார், 40. தி.மு.க., ஒன்றிய பிரதிநிதியாகவும், அரசு ஒப்பந்ததாரராகவும் உள்ளார். இவர், கட்டடங்கள் மற்றும் சாலை அமைக்கும் பணிகளை, ஒப்பந்தம் எடுத்து செய்து வந்தார். நேற்று காலை, போரூர் அருகே இருசக்கர வாகனத்தில் குமார் வந்த போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், பயங்கர ஆயுதங்களால், அவரை தாக்கினர்.

இதில், நிலை குலைந்த குமார், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து மயங்கினார். மர்ம நபர்கள் தப்பி சென்றனர். அக்கம்பக்கத்தவர்களாகல் மீட்கப்பட்ட குமார், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து, போரூர் போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். குமாரை தாக்கியவர்கள், தொழில் போட்டி காரணமாக தாக்கினார்களா அல்லது கஞ்சா விற்பனை செய்தவர்களை போலீசில் காட்டிக் கொடுத்ததால், முன்விரோதம் காரணமாக தாக்கினார்களா என, பல்வேறு கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X