காதலிக்கு கத்திக்குத்து| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதலிக்கு கத்திக்குத்து

Added : நவ 08, 2021
Share
தரமணி : தரமணி, கட்டப்பொம்மன் தெருவைச் சேர்ந்தவர் அர்ச்சனா, 22. இவரும், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த அஜித், 26, என்பவரும் காதலித்துள்ளனர். அர்ச்சனாவின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. நேற்று மாலை, அர்ச்சனா வீட்டுக்கு அஜித் சென்றார். அப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அஜித், அர்ச்சனாவின் கழுத்தில் குத்தினார். அவரை உறவினர்கள் மீட்டு, அரசு

தரமணி : தரமணி, கட்டப்பொம்மன் தெருவைச் சேர்ந்தவர் அர்ச்சனா, 22. இவரும், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த அஜித், 26, என்பவரும் காதலித்துள்ளனர்.

அர்ச்சனாவின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. நேற்று மாலை, அர்ச்சனா வீட்டுக்கு அஜித் சென்றார். அப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அஜித், அர்ச்சனாவின் கழுத்தில் குத்தினார். அவரை உறவினர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அக்கம்பக்கத்தினர் கூடியதும், பயத்தில் வீட்டின் அறைக்குள் புகுந்த அஜித், துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். தகவலறிந்த தரமணி போலீசார், கதவை உடைத்து அஜித்தை மீட்டனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X