தொடர் மழையால் ஏரி, குளங்கள் நிரம்புகின்றன

Added : நவ 08, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழையால் ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில் பெரிய ஏரியான வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டுவதற்கு இன்னும் 2 அடிகளே உள்ளன.கடலுார் மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வழக்கமாக கடலோரப் பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழை அதிகளவில் பெய்யும். இந்த ஆண்டு மாவட்டத்தின் உட்பகுதிகளிலும்,


கடலுார் : கடலுார் மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழையால் ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில் பெரிய ஏரியான வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டுவதற்கு இன்னும் 2 அடிகளே உள்ளன.கடலுார் மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

வழக்கமாக கடலோரப் பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழை அதிகளவில் பெய்யும். இந்த ஆண்டு மாவட்டத்தின் உட்பகுதிகளிலும், குறிப்பாக வறட்சியான பகுதியான திட்டக்குடி, தொழுதுார், வேப்பூர் பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. கடலுார் மாவட்டத்தில் ஆண்டுக்கு இயல்பாக பெய்ய வேண்டிய மழையான 1206 மி.மீ.,ட்டரில் நேற்று வரை 1378 மி.மீ., மழை பெய்துள்ளது. பருவமழை துவங்கி ஆண்டின் இலக்கை கடந்து 172 மி.மீ., மழை கூடுதலாகவே பெய்துள்ளது.இந்த தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளன.

சம்பா நெற்பயிர் நடவு செய்துள்ள கடலுார், குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை, புவனகிரி பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கர் தண்ணீரில் மூழ்கின. மாவட்டத்தில் தென் பெண்ணையாறு, கெடிலம், மணிமுக்தா நதி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடலுார் மாவட்டத்தில் பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் விருத்தாசலம் பகுதியில் 211; சிதம்பரம் பகுதியில் 18 ஏரிகளும் உள்ளன. இது தவிர 370 ஏரிகள் கிராம ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 24 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.மீதியுள்ள 205 ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

பல ஏரிகள் 50 சதவீதம் மேல் நிரம்பியுள்ளன. மாவட்டத்தில் பெரிதான வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவான 47.50 அடியில் தற்போது 45.30 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. மேலும் பெருமாள் ஏரி 99 சதவீதம், சாத்தபாடி 50; அரங்கமங்கலம் 90; ஆனத்துார் 90; அகரஆலம்பாடி 60 சதவீதம் நிரம்பியுள்ளன. மேல கொலக்குடி 80 ; குமுடிமுளை ஏரி 95; அம்பாபுரம் ஏரி 90 ; உளுத்துார் ஏரி 90 ; சிப்பான் ஏரி 90 ; நத்தமேடு ஏரி 90; வாலாஜா 80; பொன்னேரி 80 ; நாரைக்கால் 75 சதவீதமும் நிரம்பியுள்ளன. பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கடலுார் பகுதிகளில் அதிகளவு மழைநீர் தேங்கி நெற்பயிர் மூழ்கியதால் தென்பெண்ணையாறு முகத்துவாரம் திறந்து தண்ணீர் வடிய வைக்கப்பட்டு வருகிறது

.விருத்தாசலத்தில் 17 மி.மீ., மழை மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை 8.30 மணி வரை பெய்த மழை அளவு; விருத்தாசலத்தில் 17 மி.மீ., வடகுத்து 13, கலெக்டர் அலுவலகம் 11, கடலுார் 7.8, வேப்பூர் 7, பண்ருட்டி 6, எஸ்ஆர்சி., குடிதாங்கி 5.5, காட்டுமயிலுார் 5, பரங்கிப்பேட்டை 3.8, சிதம்பரம் 3, அண்ணாமலை நகர் 2.4, புவனகிரி, கொத்தவாச்சேரி 1 உட்பட 83.50 மி.மீ., மழை பெய்தது. சராசரி 3.34 மி.மீ., ஆகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X