பொது செய்தி

தமிழ்நாடு

மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் 13ம் தேதி குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜை

Added : நவ 08, 2021
Share
Advertisement
கடலுார் : மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில், வரும் 13ம் தேதி குருப்பெயர்ச்சியை முன்னிட்டு 1008 லிட்டர் பாலாபிஷேகம் நடக்கிறது.நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவான், வரும் 13ம் தேதி மாலை 6:21 மணிக்கு, மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இதையொட்டி, புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் உள்ள 12 அடி உயர குரு பகவானுக்கு, 1008 லிட்டர் பால் அபிஷேகம் நடக்கிறது.

கடலுார் : மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில், வரும் 13ம் தேதி குருப்பெயர்ச்சியை முன்னிட்டு 1008 லிட்டர் பாலாபிஷேகம் நடக்கிறது.

நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவான், வரும் 13ம் தேதி மாலை 6:21 மணிக்கு, மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இதையொட்டி, புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் உள்ள 12 அடி உயர குரு பகவானுக்கு, 1008 லிட்டர் பால் அபிஷேகம் நடக்கிறது. அன்று காலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மகாலட்சுமி ஹோமம், 1008 கொழுக்கட்டை நிவேத்தியம், 30 விதமான அபிஷேகம் நடக்கிறது. காலை 10:00 மணி முதல் குரு பெயர்ச்சி விழா நடக்கிறது. குரு சாந்தி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், நட்சத்திர ஹோமம், ராசி ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம் நடக்கிறது.மகா பூர்ணாஹூதியை தொடர்ந்து ராசி பரிகார ஹோமம், 1008 லிட்டர் பாலாபிஷேகம் நடக்கிறது. மாலை 3:00 மணிக்கு கலச அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை சிதம்பர குருக்கள், கீதாசங்கர குருக்கள், கீதாராம் குருக்கள் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X