பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் நிலையத்தில் குவிந்த பயணிகள் 

Added : நவ 08, 2021
Share
Advertisement
கடலுார் : தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்ததால், வெளியூர் செல்ல ஏராளமானோர் கடலுார் பஸ் நிலையத்தில் குவிந்தனர்.தீபாவளி மற்றும் கன மழை காரணமாக தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. தீபாவளி பண்டிகைக்காக சென்னை, மதுரை, திருச்சி, கோயமுத்துார் உட்பட பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்த கடலுார் பகுதியை சேர்ந்தவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.இந்நிலையில் நேற்றுடன் விடுமுறை முடிந்தது.

கடலுார் : தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்ததால், வெளியூர் செல்ல ஏராளமானோர் கடலுார் பஸ் நிலையத்தில் குவிந்தனர்.

தீபாவளி மற்றும் கன மழை காரணமாக தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. தீபாவளி பண்டிகைக்காக சென்னை, மதுரை, திருச்சி, கோயமுத்துார் உட்பட பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்த கடலுார் பகுதியை சேர்ந்தவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.இந்நிலையில் நேற்றுடன் விடுமுறை முடிந்தது. இதனையடுத்து, விடுமுறைக்கு திரும்பியவர்கள் தாங்கள் வேலை செய்யும் ஊர்களுக்கு செல்ல நேற்று காலை முதல் கடலுார் பஸ் நிலையத்தில் குவிந்தனர். சென்னைக்கு அதிக பயணிகள் சென்றனர். இதனையடுத்து சென்னை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு கடலுாரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இதனால், பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X