பொது செய்தி

இந்தியா

தமிழக பாடநுாலில் புதுச்சேரி வரலாறு

Added : நவ 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி : தமிழக பாடநுால் வாரியம் அடுத்த கல்வியாண்டிற்கான பாட நுாலில், புதுச்சேரி வரலாற்றை இணைக்க வேண்டும் என நாஜிம் எம்.எல்.ஏ., தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தார்.தமிழக முதல்வர் ஸ்டாலினிடம், காரைக்கால் எம்.எல்.ஏ., நாஜிம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:சுதந்திரம் அடைந்த பிறகும் கூட புதுச்சேரி மாநிலம் 54ம் ஆண்டு வரை பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து

புதுச்சேரி : தமிழக பாடநுால் வாரியம் அடுத்த கல்வியாண்டிற்கான பாட நுாலில், புதுச்சேரி வரலாற்றை இணைக்க வேண்டும் என நாஜிம் எம்.எல்.ஏ., தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தார்

.தமிழக முதல்வர் ஸ்டாலினிடம், காரைக்கால் எம்.எல்.ஏ., நாஜிம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:சுதந்திரம் அடைந்த பிறகும் கூட புதுச்சேரி மாநிலம் 54ம் ஆண்டு வரை பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து விடுபடவில்லை. மறைந்த முன்னாள் பிரதமர் நேரு காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் புதுச்சேரி மாநில நிர்வாகம் நடைபெற்று வருகிறது.கவிஞர் பாரதி தாசன் பிறந்த, பாரதியார் வாழ்ந்த புதுச்சேரி மண், பல உன்னதமான இலக்கியப் படைப்புகளை தந்துள்ளது.புதுச்சேரி மாநிலம் பூகோள ரீதியாக நான்கு பிராந்தியங்களை தனித்துவமாக கொண்டுள்ளது. ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு, மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகள் பேசும் மாநிலமாக திகழ்கிறது.இப்படி ஏராளமாக பல வரலாறுகளை புதுச்சேரி மாநிலம் பெற்றுள்ளது. இவற்றை புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் தமிழக பாடநுால் புத்தகத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும்.இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்திற்கு, தமிழகத்தில் ஒரு அங்கீகாரம் கிடைக்கும். தமிழக பாடநுால் வாரியம் அடுத்த கல்வியாண்டிற்கான பாடநுால் தயாரிக்கும் போது புதுச்சேரி வரலாற்றையும் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X