இந்தியா

அறிமுகம் எஸ்.எம்.எஸ்., மூலம் வானிலை எச்சரிக்கை...புதுச்சேரி மீன்வளத் துறை புதுமை முயற்சி

Added : நவ 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி : மீனவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் வானிலை எச்சரிக்கை அனுப்பும் திட்டம், புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டுள்ளது.மழை மற்றும் புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் போது மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்க, சென்னை வானிலை ஆராய்ச்சி மையத்தின் மூலம் புதுச்சேரி அரசுக்கு வானிலை எச்சரிக்கை தகவல் அளிக்கப்படும். அதன் அடிப்படையில், புதுச்சேரி மாநில மீன்வளம் மற்றும்
 அறிமுகம்    எஸ்.எம்.எஸ்., மூலம் வானிலை எச்சரிக்கை...புதுச்சேரி மீன்வளத் துறை புதுமை முயற்சி

புதுச்சேரி : மீனவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் வானிலை எச்சரிக்கை அனுப்பும் திட்டம், புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மழை மற்றும் புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் போது மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்க, சென்னை வானிலை ஆராய்ச்சி மையத்தின் மூலம் புதுச்சேரி அரசுக்கு வானிலை எச்சரிக்கை தகவல் அளிக்கப்படும். அதன் அடிப்படையில், புதுச்சேரி மாநில மீன்வளம் மற்றும் மீனவர்நலத் துறை மூலம் சுற்றறிக்கை தயார் செய்து, மீனவ பஞ்சாயத்துகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதை தொடர்ந்து, மீனவ பஞ்சாயத்துகள் வழியாக, வானிலை எச்சரிக்கை தகவல் மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நடைமுறையால் ஏற்படும் காலதாமதம் காரணமாக, மீனவர்கள் வானிலை எச்சரிக்கையை குறித்த நேரத்தில் அறிந்துகொள்ள முடியாத நிலை உள்ளது.மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லவும், கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்பவும், வானிலை எச்சரிக்கை தகவல் மிகவும் உறுதுணையாக உள்ளது.

மேற்கூறிய நடைமுறையால், மீனவர்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.செயலர் அதிரடி இதனை தவிர்க்க, மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், துறை செயலர் நெடுஞ்செழியன் உத்தரவின்பேரில், புதுச்சேரி மாநிலத்தில் முதன் முறையாக, மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கையை மொபைல் போனில் எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) மூலம் அனுப்பும் திட்டம் நேற்று பரிட்சார்த்த அடிப்படையில் அமல்படுத்தப்பட்டது.இத்திட்டத்தின் துவக்கமாக, துறை இயக்குனர் பாலாஜி தலைமையில் அதிகாரிகள், மீனவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் வானிலை எச்சரிக்கை தகவல்களை அனுப்பி வருகின்றனர்.

புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் 43,283 மீனவர்கள் உள்ளனர். இவர்களில், முதல்கட்டமாக, 18,065 பேருக்கு வானிலை எச்சரிக்கை குறுஞ்செய்தியாக நேற்று முதல் அனுப்பப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் குறுஞ்செய்தியுடன், 'வாய்ஸ் ரெக்கார்ட்' எச்சரிக்கை தகவல் அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X