இந்தியா

நிதி உதவி பள்ளி ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்த முடிவு

Added : நவ 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி : அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை உடனே அமல்படுத்த வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.இது குறித்து, அரசு நிதி உதவிபெறும் பள்ளி ஆசிரியர் மற்றும் ஊழியர் நலச்சங்க கவுரவத் தலைவர் சேஷாச்சலம் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரி அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர் மற்றும் ஊழியர் நலச் சங்க

புதுச்சேரி : அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை உடனே அமல்படுத்த வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து, அரசு நிதி உதவிபெறும் பள்ளி ஆசிரியர் மற்றும் ஊழியர் நலச்சங்க கவுரவத் தலைவர் சேஷாச்சலம் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரி அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர் மற்றும் ஊழியர் நலச் சங்க செயற்குழுக் கூட்டம், சங்கத்தின் கவுரத் தலைவர் சேஷாச்சலம் தலைமையில் நடந்தது.இதில், அனைத்து நிலை அரசு பள்ளி மற்றும் கல்லுாரி ஆசிரியர்களுக்கும் வழங்கியது போல, அரசு நிதி உதவி பள்ளி ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கும் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை அரசு அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் 9ம் தேதி பள்ளிகல்வித் துறை முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், 11ம் தேதி சட்டசபை முன் மாலை நேர தர்ணா, 15ம் தேதி பள்ளி கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம், 22ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X