பொது செய்தி

இந்தியா

புதுச்சேரியில் நேற்று லேசான மழை

Added : நவ 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று நாள் முழுவதும் லேசான மழை பெய்தது.வங்கக் கடலில் தமிழக கடற்கரையை ஒட்டிய பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு காரணமாக, புதுச்சேரியில் நேற்று பகல் நேரத்தில் விட்டு விட்டு லேசான மழை பெய்தது.நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் நேற்று காலை 8:30 மணி வரை, 2.4.மி.மீ., மழை பதிவானது புதுச்சேரிக்கு வந்த சுற்றுலா பயணிகள், சாரல் மழையில் நனைந்தபடி
 புதுச்சேரியில் நேற்று லேசான மழை

புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று நாள் முழுவதும் லேசான மழை பெய்தது.வங்கக் கடலில் தமிழக கடற்கரையை ஒட்டிய பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு காரணமாக, புதுச்சேரியில் நேற்று பகல் நேரத்தில் விட்டு விட்டு லேசான மழை பெய்தது.

நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் நேற்று காலை 8:30 மணி வரை, 2.4.மி.மீ., மழை பதிவானது புதுச்சேரிக்கு வந்த சுற்றுலா பயணிகள், சாரல் மழையில் நனைந்தபடி நகரப்பகுதியில் உலா வந்தனர்.சண்டே மார்கெட் பாதிப்புகாலை முதல் மாலை வரை பெய்த லேசான மழை காரணமாக காந்தி வீதியில் இயங்கும் சண்டே மார்க்கெட்டில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.கடற்கரை சாலை, பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்கள் மக்கள் வரத்து இன்றி வெறிச்சோடின.நோணாங்குப்பம் படகு குழாமில் நேற்று படகு போக்குவரத்து வழக்கம்போல் இயங்கியது. ஆனால், வழக்கத்திற்கு குறைவான சுற்றுலா பயணிகளே வந்தனர். கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால், சுற்றுலா பயணிகளை பேரடைஸ் கடற்கரைக்கு அழைத்து செல்லாமல், படகு சவாரிக்கு மட்டும் அனுமதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X