பொது செய்தி

இந்தியா

முருங்கப்பாக்கம் அரவிந்தர் நகரில் குண்டும் குழியுமான சாலைகள் ; சீரமைக்குமாறு எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை

Added : நவ 08, 2021
Share
Advertisement
அரியாங்குப்பம் : முருங்கப்பாக்கம் அரவிந்தர் நகரில் சாலைகள் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.முருங்கப்பாக்கத்தில் இருந்து வில்லியனுார் செல்லும் வழியில், அரவிந்தர் நகர் உள்ளது. இது, 11 குறுக்கு தெருக்களை கொண்ட பெரிய நகர் பகுதி ஆகும். இங்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர்.சுதானா நகர்,


அரியாங்குப்பம் : முருங்கப்பாக்கம் அரவிந்தர் நகரில் சாலைகள் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

முருங்கப்பாக்கத்தில் இருந்து வில்லியனுார் செல்லும் வழியில், அரவிந்தர் நகர் உள்ளது. இது, 11 குறுக்கு தெருக்களை கொண்ட பெரிய நகர் பகுதி ஆகும். இங்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர்.சுதானா நகர், துலுக்கானத்தம்மன் நகர், வேல்ராம்பட்டு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள், அரவிந்தர் நகர் ரோட்டினை பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக இந்த நகரில் சாலைகள் போடாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.குண்டும், குழியுமாக இருக்கும் சாலைகளை செப்பனிட வேண்டும் என, கடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதி எம்.எல்.ஏ., விடம் பல முறை முறையிட்டனர். ஆனால் இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை.அரவிந்தர் நகர் பகுதியில சாலைகள் அமைக்க, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்பதால், நிதி இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இந்நிலையில், தற்போது பெய்து வரும் தொடர் மழையால், குண்டும் குழியுமான சாலைகளில் செல்ல வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ., தட்சிணாமூர்த்தியிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டனர்.அவர், நேரில் பார்வையிட்டு, சாலைகளை செப்பனிட நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X