பாதாள வடிகால் குழாய் சேதம் கென்னடி எம்.எல்.ஏ., ஆய்வு | Dinamalar

பொது செய்தி

இந்தியா

பாதாள வடிகால் குழாய் சேதம் கென்னடி எம்.எல்.ஏ., ஆய்வு

Added : நவ 08, 2021
Share
புதுச்சேரி : அண்ணா சாலை பகுதியில் சேதமடைந்த பாதாள வடிகால் குழாயை, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பார்வையிட்டு அதிகாரிகள் மூலம் மாற்றியமைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.உப்பளம் தொகுதிக்குட்பட்ட அண்ணா சாலை, புல்லுக்கடை அருகே பாதாள வடிகால் குழாய் சேதமடைந்து, மழைநீர் சாலையில் தேங்கியது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அவதிக்குள்ளாகினர்.இதுகுறித்து தகவலறிந்த
 பாதாள வடிகால் குழாய் சேதம்  கென்னடி எம்.எல்.ஏ., ஆய்வு

புதுச்சேரி : அண்ணா சாலை பகுதியில் சேதமடைந்த பாதாள வடிகால் குழாயை, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பார்வையிட்டு அதிகாரிகள் மூலம் மாற்றியமைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

உப்பளம் தொகுதிக்குட்பட்ட அண்ணா சாலை, புல்லுக்கடை அருகே பாதாள வடிகால் குழாய் சேதமடைந்து, மழைநீர் சாலையில் தேங்கியது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அவதிக்குள்ளாகினர்.இதுகுறித்து தகவலறிந்த தொகுதி எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி, பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு, மழைநீர் தேங்குவதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டார்.

அதையடுத்து, அண்ணா சாலையில் சேதமடைந்து இருந்த பாதாள வடிகால் குழாய் அகற்றப்பட்டு, புதிய குழாய் பதிக்கப்பட்டது.தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற் பொறியாளர் ரவிச்சந்திரன், துணை பொறியாளர்கள் சவுந்தர்ராஜன், வைத்தியநாதன், இளநிலை பொறியாளர் சங்கர், தி.மு.க., கிளை செயலாளர் செல்வம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X