பொது செய்தி

தமிழ்நாடு

ஏரியில் தவறி விழுந்து விவசாயி பலி

Added : நவ 08, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே பிரம்மதேசம் ஏரியில் தவறி விழுந்து விவசாயி இறந்தார்.விக்கிரவாண்டி அடுத்த பிரம்மதேசத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார், 40: விவசாய கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் பிற்பகல் தனக்கு சொந்தமான மாடுகளை வயலில் மேய்த்து விட்டு மாலையில் மாடுகளை வீட்டிற்கு ஓட்டிக்கொண்டு வீட்டிற்கு திரும்பினார்.பிரம்மதேசம் ஏரிக்கரை வழியாக வந்தபோது ஏரி

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே பிரம்மதேசம் ஏரியில் தவறி விழுந்து விவசாயி இறந்தார்.

விக்கிரவாண்டி அடுத்த பிரம்மதேசத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார், 40: விவசாய கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் பிற்பகல் தனக்கு சொந்தமான மாடுகளை வயலில் மேய்த்து விட்டு மாலையில் மாடுகளை வீட்டிற்கு ஓட்டிக்கொண்டு வீட்டிற்கு திரும்பினார்.

பிரம்மதேசம் ஏரிக்கரை வழியாக வந்தபோது ஏரி கலுங்கலில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.மாடுகள் வீட்டிற்குச் சென்ற நிலையில் கணவர் வீடு திரும்பாததால் அவருடைய மனைவி புனிதா, உறவினர்களுடன் தேடினார். அப்போது, ஜெயகுமார் உடல் ஏரியின் கலுங்கல் பகுதியில் மிதந்தது.பெரியதச்சூர் போலீசார் மற்றும் வி.ஏ.ஓ., ராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து செல்வகுமாரின் உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X