சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சப் இன்ஸ்பெக்டர் மீது பட்டாசை வீசிய 4 பேர் கைது

Added : நவ 08, 2021
Share
Advertisement
திருக்கோவிலுார் : அரகண்டநல்லுாரில் சப் இன்ஸ்பெக்டர் மீது பட்டாசை கொளுத்தி வீசிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுாரில், திருக்கோவிலுார் - விழுப்புரம் சாலையில், கடந்த 5ம் தேதி இரவு நடுரோட்டில் சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.தகவலறிந்த சப் இன்ஸ்பெக்டர் டார்ஜான் மற்றும் போலீசார் சம்பவ

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுாரில் சப் இன்ஸ்பெக்டர் மீது பட்டாசை கொளுத்தி வீசிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுாரில், திருக்கோவிலுார் - விழுப்புரம் சாலையில், கடந்த 5ம் தேதி இரவு நடுரோட்டில் சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.தகவலறிந்த சப் இன்ஸ்பெக்டர் டார்ஜான் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பட்டாசு வெடித்தவர்களிடம் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஒதுக்குப்புறமாக சென்று வெடிக்குமாறு அறிவுறுத்தினர்.

அப்போது, அரகண்டநல்லுாரைச் சேர்ந்த அர்ஜூனன் மகன் ஆகாஷ், 19; சரவணன் மகன் விக்னேஷ், 27; கலியன் மகன் சோமு, 35; சம்சுதீன் மகன் ஷாநவாஸ், 40; ஆகியோர் பட்டாசை கொளுத்தி சப் இன்ஸ்பெக்டர் டார்ஜான் மீது வீசினர்.தகவல் அறிந்து போலீஸ் நிலையத்திலிருந்து வந்த போலீசார், ஆகாஷ் உட்பட 4 பேரையும் மடக்கி பிடித்து, கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X