கள்ளக்குறிச்சி : கல்வியை நன்கு உணர்ந்து படித்தால் எதிர்கால வாழ்க்கை இன்பமயம் என ஏ.கே.டி., கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ராஜேந்திரன் பேசினார்.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., கல்விக் குழுமத்தின் நீட் மையத்தில் பயிற்சி பெற்ற மாணவ மாணவிகள் நீட் தேர்வில் சாதனை படைத்தனர். இதனையொட்டி, நீட் பயிற்சி மையத்தின் தென்னிந்திய ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
விழாவிற்கு தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் லட்சுமிபிரியா வரவேற்றார்.தொடர்ந்து நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் பேசுகையில், 'மாணவ, மாணவிகளுக்கு நேர்மறை எண்ணங்கள் வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் கூடாது. இன்ப ஒளி உங்கள் இல்லங்களில் வசந்தமாக வீச கல்வி மூலம் உறுதுணையாக இருப்போம்.
கல்வியை நன்கு உணர்ந்து படித்தால், எதிர்கால வாழ்க்கை இன்பமயமாகும். அதை உருவாக்கி தருவது ஏ.கே.டி.,கல்வி நிறுவனத்தின் தலையாய கடமையாகும். நாம் பேசுகின்ற வார்த்தைகளை பொருத்துதான் நமக்கு மதிப்பு உயரும். பணிவுடன் செயல்படுபவர்களுக்கு வரலாறு சொந்தம். கல்வியறிவோடு, பொது அறிவையும் வளர்த்து எதிர்கால சவால்களில் வெற்றி பெறும் வகையில் மாணவ மாணவிகளை உருவாக்குவோம்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE