பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., கூடாரம் அடியோடு காலி; வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பேச்சு

Added : நவ 08, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தி.மு.க., தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது.தெற்கு மாவட்ட பொருப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில், திருக்கோவிலுார், சின்னசேலம், தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் ஒன்றியங்களுக்குட்பட்ட அ.தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளைச்


கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தி.மு.க., தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது.தெற்கு மாவட்ட பொருப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில், திருக்கோவிலுார், சின்னசேலம், தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் ஒன்றியங்களுக்குட்பட்ட அ.தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 55 ஊராட்சித் தலைவர்கள், 72 துணைத் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உட்பட 3,000 பேர் எம்.எல்.ஏ., முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர்.அப்போது வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பேசுகையில், 'கள்ளக்குறிச்சி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அ.தி.மு.க., உள்ளிட்ட மாற்று கட்சிகளை சேர்ந்த 55 ஊராட்சி தலைவர்கள் தி.மு.க.,வில் இணைந்துள்ளனர். இத்துடன் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் இடம்பிடித்துள்ள அ.தி.மு.க., நிர்வாகிகளின் கூடாரம் அடியோடு காலியானது' என்றார்.நிகழ்ச்சியில், மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய சேர்மன்கள் அலமேலு ஆறுமுகம், தாமோதரன், வடிவுக்கரசு சுப்ரமணியன், சத்தியமூர்த்தி, அஞ்சலாட்சி அரசகுமார், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, ஆறுமுகம், காமராஜ், எத்திராசு, மலையரசன், ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், அரவிந்தன், நெடுஞ்செழியன், பெருமாள், பாரதிதாசன், ராஜேந்திரன், அய்யனார், கிருஷ்ணமூர்த்தி, கனகராஜ் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X