தடுப்பணையில் வௌ்ளப் பெருக்கு போக்குவரத்து துண்டிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடுப்பணையில் வௌ்ளப் பெருக்கு போக்குவரத்து துண்டிப்பு

Added : நவ 08, 2021
Share
அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அருகே செவலபுரை தடுப்பணை நிரம்பி வழிந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.மேல்மலையனுார் பகுதியில் பொழிந்த கன மழையினால் செவலபுரை கிராமத்தில் உள்ள வராக நதி தடுப்பணை நிரம்பியது. 3 தினங்களாக உபரி நீர் வெளியேறி சங்கராபரணி ஆற்றில் கலக்கிறது.இதனால், இப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. செவலபுரை, சித்தாத்துார், தாதிகுளம்,
 தடுப்பணையில் வௌ்ளப் பெருக்கு போக்குவரத்து துண்டிப்பு

அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அருகே செவலபுரை தடுப்பணை நிரம்பி வழிந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

மேல்மலையனுார் பகுதியில் பொழிந்த கன மழையினால் செவலபுரை கிராமத்தில் உள்ள வராக நதி தடுப்பணை நிரம்பியது. 3 தினங்களாக உபரி நீர் வெளியேறி சங்கராபரணி ஆற்றில் கலக்கிறது.இதனால், இப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. செவலபுரை, சித்தாத்துார், தாதிகுளம், மேல்மலையனுார், தாதங்குப்பம், ஏம்பலம், வடபால, தென்பாலை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செஞ்சிக்கு செல்ல 20 கி.மீ., சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.இப்பகுதியில் கிராம மக்கள் நலன் கருதி மேம்பாலம் கட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X