பொது செய்தி

தமிழ்நாடு

கேரளா அரசை கண்டித்து மேலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; வெள்ளலூரில் கடையடைப்பு

Added : நவ 08, 2021
Share
Advertisement
மேலுார் : முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தாமல் வீண் வதந்தி பரப்பும் கேரளா அரசை கண்டித்து மேலுாரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளலுார் நாட்டை சேர்ந்த வர்த்தகர்கள் கடையடைப்பு செய்தனர்.முல்லை பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்க தலைவர்முருகன் தலைமையில் பஸ் ஸ்டாண்ட் முன் ஆர்பாட்டம் நடந்தது. வெள்ளலுார் நாட்டை சேர்ந்த விவசாயிகள்சங்க நிர்வாகி

மேலுார் : முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தாமல் வீண் வதந்தி பரப்பும் கேரளா அரசை கண்டித்து மேலுாரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளலுார் நாட்டை சேர்ந்த வர்த்தகர்கள் கடையடைப்பு செய்தனர்.

முல்லை பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்க தலைவர்முருகன் தலைமையில் பஸ் ஸ்டாண்ட் முன் ஆர்பாட்டம் நடந்தது. வெள்ளலுார் நாட்டை சேர்ந்த விவசாயிகள்சங்க நிர்வாகி குறிஞ்சிகுமரன், ஊராட்சி தலைவர் கவுசிகன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவும், அணை பாதுகாப்பை மத்திய படைகளிடம் ஒப்படைக்கவும் வலியுறுத்தப்பட்டது.

அணைக்கு மத்தியபாதுகாப்பு படை கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.சங்க தலைவர் முருகன் கூறுகையில், ''நீர்மட்டத்தை குறைக்க கோரி கேரளா அரசு தொடர்ந்த வழக்குவிசாரணைக்கு வருவதால் தமிழக அரசு வாதிட்டு உரிமையை நிலை நாட்ட வேண்டும். கேரளா நீர்பாசன அமைச்சர் மீது வழக்கு தொடர வேண்டும்.

இப்பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் கேரளா பாதைகள் அடைக்கப்படுவதுடன் பந்த் நடத்தப்படும்,'' என்றார்.சங்க செயலாளர் ரவி, பொருளாளர் ஜெயபால், துணை தலைவர் பாண்டி கருப்பணன், துணை செயலாளர் அசோக்குமார், வர்த்த சங்க தலைவர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்து சங்கத்தினர் பங்கேற்றனர். டி.எஸ்.பி., பிரபாகரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X