பொது செய்தி

தமிழ்நாடு

மழைநீர் சூழ்ந்த பகுதி மக்களை பள்ளிகளில் தங்க வைக்க ஏற்பாடு

Added : நவ 08, 2021
Share
Advertisement
மதுரை : மதுரையில் மழைநீர் சூழ்ந்த பகுதி மக்களை அருகில் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கவேண்டும் என கலெக்டர்அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்.நகரில் மூன்று நாட்களாக கனமழை பெய்வதால் வைகையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. கல்பாலம், தற்காலிக பாலங்களில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் பாலாஜி

மதுரை : மதுரையில் மழைநீர் சூழ்ந்த பகுதி மக்களை அருகில் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கவேண்டும் என கலெக்டர்அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்.

நகரில் மூன்று நாட்களாக கனமழை பெய்வதால் வைகையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. கல்பாலம், தற்காலிக பாலங்களில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் பாலாஜி நகர், மகாத்மா காந்திஜி குறுக்கு தெரு, சிதம்பரனார் தெரு, அவனியாபுரம், ஜே.பி.நகரை கலெக்டர், கமிஷனர் ஆய்வு செய்தனர். மழைநீரை அகற்றி, கால்வாய் அடைப்பை சரி செய்ய அறிவுறுத்தினர்.

அவனியாபுரம் ஐவத்துனேந்தல், அயன்பாப்பாக்குடி கண்மாய்களில் மழைநீர் வடிய எடுக்கப்பட்டுள்ள பணிகளை ஆய்வு செய்தனர்.உதவி கமிஷனர் சுரேஷ்குமார், உதவி செயற்பொறியாளர் மனோகரன்,உதவி பொறியாளர்கள் குழந்தைவேலு, மயிலேறி நாதன், தேவராஜன், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன் உடன்சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X