பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் கோயிலில் இன்று வேல் வாங்குதல்

Added : நவ 08, 2021
Share
Advertisement
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கோவர்த்தனாம்பிகை அம்பாளிடம்இருந்து சுப்பிரமணிய சுவாமி 'வேல் வாங்கும்' நிகழ்ச்சி இன்று (நவ.,8) மாலை நடக்கிறது.இக்கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நாளை (நவ., 9) நடக்கும் சூரசம்ஹாரலீலைக்காக இன்று மாலை 6:30 முதல் 7:30 மணிக்குள் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.சத்திய கிரீஷ்வரர், கோவர்த்தனாம்பிகை

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கோவர்த்தனாம்பிகை அம்பாளிடம்இருந்து சுப்பிரமணிய சுவாமி 'வேல் வாங்கும்' நிகழ்ச்சி இன்று (நவ.,8) மாலை நடக்கிறது.

இக்கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நாளை (நவ., 9) நடக்கும் சூரசம்ஹாரலீலைக்காக இன்று மாலை 6:30 முதல் 7:30 மணிக்குள் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

சத்திய கிரீஷ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாளுடன் சர்வ அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருள்வார். மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்கை அம்மன், சத்தியகிரீஷ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகைக்கு சிறப்பு பூஜை முடிந்து, திருவிழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு பரிவட்டம் கட்டப்படும்.

அம்பாள் கரத்திலிருக்கும் நவரத்தின வேல் சகல விருதுகளுடன் பெறப்பட்டு, நந்தியை வலம் சென்று சுப்பிரமணிய சுவாமி கரத்தில் சாத்துப்படி செய்யப்படும். தீபாராதனை முடிந்து சுவாமி பூ சப்பரத்தில் திருவாட்சி மண்டபத்தை ஆறுமுறை வலம் வந்து அருள்பாலிப்பார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X