பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளுக்கான கல்வி உரிமையை பயன்படுத்த வேண்டும்: நீதிபதி வலியுறுத்தல்

Added : நவ 08, 2021
Share
Advertisement
மதுரை : “குழந்தைகளுக்கான கல்வி உரிமையை பயன்படுத்தி பெற்றோர்அவர்களை படிக்க வைக்க வேண்டும்,” என, மதுரையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி தீபா வலியுறுத்தினார்.தேசிய அளவில் சட்டப்பணிகள் ஆணைக் குழு துவங்கி 25 ம் ஆண்டை முன்னிட்டு சட்டம் மற்றும் சட்டம் சாராத பிரச்னைகள் தொடர்பாக மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில்

மதுரை : “குழந்தைகளுக்கான கல்வி உரிமையை பயன்படுத்தி பெற்றோர்அவர்களை படிக்க வைக்க வேண்டும்,” என, மதுரையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி தீபா வலியுறுத்தினார்.

தேசிய அளவில் சட்டப்பணிகள் ஆணைக் குழு துவங்கி 25 ம் ஆண்டை முன்னிட்டு சட்டம் மற்றும் சட்டம் சாராத பிரச்னைகள் தொடர்பாக மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வழக்கறிஞர்கள் முத்துகுமார், அர்ச்சனாதேவி, காயத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

துண்டு பிரசுரம் வழங்கி சார்பு நீதிபதி தீபா பேசியதாவது: அடிப்படை சட்டம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஒரு கி.மீ.,க்குள் அங்கன்வாடியோ, அரசு பள்ளியோ இல்லாத நிலையில், அப்பகுதியில் மெட்ரிக் பள்ளி இருந்தால் அங்குள்ள ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்கப்படுகிறது. பெண் குழந்தைகளை பெற்றோர் கட்டாயம் படிக்க வைத்து கல்வி உரிமையை பயன்படுத்த வேண்டும். கொரோனாவில் இறந்தால் அக்குடும்பத்திற்கு மாநில அரசு ரூ.3 லட்சம், மத்திய அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குகிறது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X