போலீஸ் செய்திகள்

Added : நவ 08, 2021
Share
Advertisement
அரசு வேலை வாங்கிதருவதாக மோசடிமதுரை: காமராஜர்புரம் காளீஸ்வரன் 30. இவருக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ஐராவதநல்லுார் சதீஷ்ராஜன் 43, அணுகினார். அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தனக்கு தெரிந்தவர் இருப்பதாக கூறி ரூ.1.5 லட்சம் பெற்று மோசடி செய்ததாக கீரைத்துரை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.நகை பறிப்புமதுரை: திருப்புவனம் முத்துமாரி 33. வேலம்மாள் மருத்துவக்கல்லுாரி அருகே

அரசு வேலை வாங்கிதருவதாக மோசடி

மதுரை: காமராஜர்புரம் காளீஸ்வரன் 30. இவருக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ஐராவதநல்லுார் சதீஷ்ராஜன் 43, அணுகினார். அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தனக்கு தெரிந்தவர் இருப்பதாக கூறி ரூ.1.5 லட்சம் பெற்று மோசடி செய்ததாக கீரைத்துரை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

நகை பறிப்பு

மதுரை: திருப்புவனம் முத்துமாரி 33. வேலம்மாள் மருத்துவக்கல்லுாரி அருகே இரவு 9:00 மணிக்கு நடந்து வந்தபோது 30 வயது நபர், ஒரு பவுன் நகையை பறித்துச்சென்றார். போலீசார் விசாரிக்கின்றனர்.

அரசு ஊழியர்வீட்டில் திருட்டு

மதுரை: கருப்பாயூரணி கார்த்திக் 30. மத்திய ஆர்.டி.ஓ., அலுவலகஊழியர். குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு சென்று திரும்பிய போது 5 பவுன் நகைகள், கால் கிலோ வெள்ளி, ஒரு கிராம் தங்க காசு, 3 கிலோ வெண்கல விளக்கு, டிவி திருடப்பட்டிருந்தன. அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

வைகையில் 2 பேர் மாயம் தேடுதல் தொடர்கிறது

வாடிப்பட்டி: திருப்பூர் விஸ்வநாதன் 21, சி.ஏ., படித்து வந்தார்.வசந்த் 18, பன்னிரெண்டாம் வகுப்பு படித்தார். இவர்கள் மதுரை பரவை அம்மன் கோயில் திருவிழாவிற்காக உறவினர் வீட்டிற்கு வந்தனர். நவ.,6 நண்பர் கரிசல்குளம் சரவணக்குமாருடன் 19, பரவை வைகையில் குளித்தபோது விஸ்வநாதன், வசந்த் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிமுத்து தலைமையில் வீரர்கள், மீட்புக்குழுவினர் இரண்டாவது நாளாக தேடினர்.

கிணற்றில் மிதந்த ரவுடி உடல்

சோழவந்தான்: கரட்டுப்பட்டி கோட்டைச்சாமி 22, மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. நவ.,5 வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று அப்பகுதி விவசாய கிணற்றில் இறந்து கிடந்தார். உடலை வாடிப்பட்டி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.கழுத்து மற்றும் வயிற்றில் காயங்கள் உள்ளன.கொலையாளிகள் உடலில் கல்லை கட்டி கிணற்றில் வீசி சென்றுஉள்ளனர். எஸ்.பி., பாஸ்கரன் சம்பவ இடத்தை பார்வையிட்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.

முதியவர் பலி

திருமங்கலம்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மணி 75, இவர் மகன் பிரபுவுடன் டூவீலரில் மதுரை சென்றார். டூவீலரை பிரபு ஓட்டினார் (ெஹல்மெட் அணிந்திருந்தார்). எலியார்பத்தி டோல்கேட் அருகே விருதுநகரில் இருந்து மதுரை சென்ற கார் மோதி காயமுற்ற மணி மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார். கூடக்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

10 பேர் மீது வழக்கு

கொட்டாம்பட்டி: தொந்திலிங்கபுரம் விக்ரம் சேனாதிபதி மற்றும் கார்த்திக். இருவருக்கும் தீபாவளி பட்டாசு வெடிப்பதில் விரோதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு விக்ரம் சேனாதிபதி நண்பர்சக்திகணேசுடன் முத்தாலம்மன்கோயில் அருகே பேசிக் கொண்டிருந்த போது கார்த்தி மற்றும் நண்பர்கள் 10 பேர் சேர்ந்து அவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். கார்த்தி, விஸ்வா உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X