நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம்; எஸ்.பி., வேண்டுகோள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம்; எஸ்.பி., வேண்டுகோள்

Added : நவ 08, 2021
Share
கள்ளக்குறிச்சி : 'கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீர்நிலைகளுக்குச் சென்று சிறுவர்கள், இளைஞர்கள் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்' என எஸ்.பி., ஜியாவுல்ஹக் கேட்டுக் கொண்டுள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இதையொட்டி பெரும்பாலான சிறுவர்கள், இளைஞர்கள் நீர்நிலைகளுக்கு சென்று குளிக்கின்றனர்.அப்போது


கள்ளக்குறிச்சி : 'கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீர்நிலைகளுக்குச் சென்று சிறுவர்கள், இளைஞர்கள் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்' என எஸ்.பி., ஜியாவுல்ஹக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இதையொட்டி பெரும்பாலான சிறுவர்கள், இளைஞர்கள் நீர்நிலைகளுக்கு சென்று குளிக்கின்றனர்.அப்போது நீரில் மூழ்கி உயிரிழப்பு போன்ற அசாம்பாவிதங்கள் ஏற்படுகிறது. எனவே, சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் நீர்நிலைகளுக்குச் சென்று குளிப்பதை பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது.

விடுமுறை நாட்களில் தங்களது குழந்தைகள் எங்கு செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். நீச்சல் தெரிந்திருந்தாலும் நீர்நிலைகளுக்குச் சென்று குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.நீர்நிலைகளில் சுழல் உள்ள இடம், புதை மணல், சகதி நிறைந்த இடம், மற்றும் ஆழமான பகுதிகளின் தன்மை அறியாமல் குளிப்பதோ, டைவ் அடிப்பதோ கூடாது.

குறிப்பாக குடிபோதையில் நீர்நிலைகளுக்கு குளிக்க செல்வதைத் தவிர்க்க வேண்டும்.உயிர் பாதுகாப்பு முதலுதவி முறையினை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.மேலும், எஸ்.பி., உத்தரவைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X