தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை தீவிரம்; பயிர்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு ஆலோசனை

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
இம்மாவட்ட ஆண்டு சராசரி மழை 874.5 மி.மீ., இதில் வடகிழக்கு பருவமழை 406.9 மி.மீ., பத்தாண்டுகளாக அக்., சராசரி மழை அளவு 200.7 மி.மீ., கடந்தாண்டு 139.89 மி.மீ., பெய்த நிலையில் இந்தாண்டு 175.4 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட 30 ஆயிரம் எக்டேர் நெற்பயிர் வளர்ச்சி பருவத்தில் உள்ளது. ராபி பருவத்தில் பயிர் செய்யப்பட்ட
வடகிழக்கு பருவமழை தீவிரம்; பயிர்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு ஆலோசனை

இம்மாவட்ட ஆண்டு சராசரி மழை 874.5 மி.மீ., இதில் வடகிழக்கு பருவமழை 406.9 மி.மீ., பத்தாண்டுகளாக அக்., சராசரி மழை அளவு 200.7 மி.மீ., கடந்தாண்டு 139.89 மி.மீ., பெய்த நிலையில் இந்தாண்டு 175.4 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட 30 ஆயிரம் எக்டேர் நெற்பயிர் வளர்ச்சி பருவத்தில் உள்ளது. ராபி பருவத்தில் பயிர் செய்யப்பட்ட மக்காச்சோளம், பயறு வகைகள், பருத்தி மற்றும் கரும்பு 29 ஆயிரம் எக்டேரில் விதைப்பு மற்றும் வளர்ச்சி பருவத்தில் உள்ளதால் பாதுகாப்பது அவசியம்.

வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தன் கூறியதாவது: நெற்பயிர்கள் மழையால் நீர் தேங்கினால் மஞ்சள் நிறமாக மாறி விடும். இளம்பயிர்களாக இருந்தால் ஏக்கருக்கு ஒரு கிலோ ஜிங்க் சல்பேட், 2 கிலோ யூரியாவை 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலைகளின் மேல் தெளிக்க வேண்டும். அதற்கு மேல் வளர்ச்சி குன்றி காணப்பட்டால் ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம், 4 கிலோ வேப்பம்புண்ணாக்கை கலந்து ஒருநாள் இரவு வைத்திருக்க வேண்டும்.

மறுநாள் இந்த கலவையுடன் 17 கிலோ பொட்டாஷ் கலந்து மண்ணில் இட வேண்டும். பூக்கள் உருவாகும் பருவத்தில் இருந்தால் ஏக்கருக்கு 1.4 கிலோ டி.ஏ.பி. உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாளே ஊறவைத்து மறுநாள் வடிகட்டி கரைசலுடன் 2 கிலோ யூரியா, ஒரு கிலோ பொட்டாஷ் உரத்தை 190 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலையில் கைதெளிப்பானால் தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் மகசூல் இழப்பை தடுக்க முடியும்.

மாவட்டத்தில் 10,300 எக்டேரில் தென்னை சாகுபடியாகிறது. கன மழையால் பலத்த காற்று வீசும் பட்சத்தில் முதிர்ந்த காய்களை உடனடி அறுவடை செய்ய வேண்டும். அதிக ஓலைகள் இருந்தால் வெட்ட வேண்டும். மக்காச்சோளம், உளுந்து, தட்டைபயறு சாகுபடியில் மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி செய்ய வேண்டும். அதிக பாதிப்பு நேரிட்டால் அருகிலுள்ள வேளாண் வட்டார விரிவாக்க மைய அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-நவ-202117:53:16 IST Report Abuse
சம்பத் குமார் விவசாய நண்பர்கள் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தை இப்பொழுதே அல்லது வரும் காலங்களில் தவறாமல் பின்பற்ற வேண்டும்.அது உங்களுக்கு இழப்புகளை தவிர்க்கும். நன்றி வணக்கம் ஐயா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X