மதுரை ஆவின் இனிப்பு ரூ.6 கோடி விற்பனை

Added : நவ 08, 2021
Advertisement
மதுரை : “தீபாவளியை முன்னிட்டு மதுரை ஆவின் இனிப்புகள் ரூ.6 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. இது இலக்கை விட ரூ.2 கோடி அதிகம்,” என, பொது மேலாளர் கருணாகரன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: நடமாடும் இனிப்பு விற்பனை வாகனங்கள் துவங்கியது உள்ளிட்ட நடவடிக்கைகளால் இந்தாண்டு அதிகபட்சமாக 40 டன் மைசூர்பாகும் (கடந்தாண்டு 17 டன்), 12 டன் பால்கோவாவும் (கடந்தாண்டு 3 டன்) விற்பனை செய்யப்பட்டன. நெய்

மதுரை : “தீபாவளியை முன்னிட்டு மதுரை ஆவின் இனிப்புகள் ரூ.6 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. இது இலக்கை விட ரூ.2 கோடி அதிகம்,” என, பொது மேலாளர் கருணாகரன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: நடமாடும் இனிப்பு விற்பனை வாகனங்கள் துவங்கியது உள்ளிட்ட நடவடிக்கைகளால் இந்தாண்டு அதிகபட்சமாக 40 டன் மைசூர்பாகும் (கடந்தாண்டு 17 டன்), 12 டன் பால்கோவாவும் (கடந்தாண்டு 3 டன்) விற்பனை செய்யப்பட்டன. நெய் உள்ளிட்ட பால் பொருட்களின் விற்பனை கடந்தாண்டை விட அதிகரித்தது.

தலைமை செயலாளர் இறையன்பு உரிய நேரத்தில் வெளியிட்ட உத்தரவால் அரசு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட பொதுத் துறைகள் சார்பில் மட்டும் ரூ.50 லட்சத்திற்கு ஆவின் இனிப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கான பால் பணம், முகவர்களுக்கான பால் கமிஷன் அனைத்தும் நிலுவையின்றி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X