பொது செய்தி

தமிழ்நாடு

மழையை கணக்கில் கொண்டு பயிர்களை தேர்வு செய்யணும் : தண்ணீர் மனிதர் யோசனை

Added : நவ 08, 2021
Share
Advertisement
மதுரை : ''மதுரை மாவட்ட ஆண்டு சராசரி மழையை கணக்கில் கொண்டு அதற்கேற்ப மாற்றுப்பயிர்களை தேர்வு செய்ய வேண்டும்,'' என, மதுரை காந்தி மியூசியத்தில் நடந்த வைகை ஆறு வளமீட்பு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற இந்தியாவின் தண்ணீர் மனிதர் ராஜேந்திரசிங் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: வைகை ஆறு தேனி அணைப்பட்டியில் மிக மோசமான கழிவுகளால் பாதிக்கப்படுகிறது. சர்க்கரை ஆலை கழிவுகள்

மதுரை : ''மதுரை மாவட்ட ஆண்டு சராசரி மழையை கணக்கில் கொண்டு அதற்கேற்ப மாற்றுப்பயிர்களை தேர்வு செய்ய வேண்டும்,'' என, மதுரை காந்தி மியூசியத்தில் நடந்த வைகை ஆறு வளமீட்பு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற இந்தியாவின் தண்ணீர் மனிதர் ராஜேந்திரசிங் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: வைகை ஆறு தேனி அணைப்பட்டியில் மிக மோசமான கழிவுகளால் பாதிக்கப்படுகிறது. சர்க்கரை ஆலை கழிவுகள் ஆற்றில் கலக்கின்றன. ஆறுகளின் பாதையில் நிறைய ஆக்கிரமிப்புகள் உள்ளன. மதுரையில் சாத்தையாறு அணைப்பகுதியிலும் மாசு மற்றும் ஆக்கிரமிப்பு பிரச்னைகள் உள்ளன.

மனிதநலனும் ஆற்றின் நலனும் ஒன்றாக இருந்தால் தான் சுற்றுச் சூழல் சீராக இருக்கும். தமிழக நீர் நிலைகள் அரசாலும் அரசு உதவியுடனும் ஆக்கிரமிக்கப்பட்டு மாசடைந்து மோசமான நிலையில் உள்ளன. அவற்றை சரி செய்ய வேண்டியது அரசின் கடமை.

சாத்தையாறு அணை பகுதிகளில் கரும்பு சாகுபடி, மதுரையில் பரவலாக நெல், கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.ஒரு கிலோ கரும்பு உற்பத்தி செய்ய 4000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. நெல்லுக்கும் இதேஅளவு தண்ணீர் தேவை என்றார்.நிர்வாகிகள் குருசாமி, ரவி, அபுபக்கர், பிரகாஷ்ராவ், சத்யநாராயணா, சஞ்சய்ராணா, விஜயபாண்டியன், மணிவண்ணன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X