பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுச்சூழலை பாதுகாக்க செயற்கை அடர்காடுகள் வளர்ப்பு

Added : நவ 08, 2021
Share
Advertisement
சுற்றுச்சூழலை பாதுகாத்து மாசில்லா நகரை உருவாக்கினால்தான் மனிதனின் வாழ்நாள் அதிகரிக்கும். இதனால் கல்வி நிறுவனங்களும் சுற்றுச்சூழல் கல்வியை மாணவர்களுக்கு வழங்குகின்றன. இருப்பினும் மக்கள்தொகை அதிகரிப்பு தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றால் சுற்றுச்சூழல் மாசுபாடு அடைகிறது.கூடலுார் நகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஆறு உள்ளிட்ட பிற நீர்நிலைகளில்
 சுற்றுச்சூழலை பாதுகாக்க செயற்கை அடர்காடுகள் வளர்ப்பு

சுற்றுச்சூழலை பாதுகாத்து மாசில்லா நகரை உருவாக்கினால்தான் மனிதனின் வாழ்நாள் அதிகரிக்கும். இதனால் கல்வி நிறுவனங்களும் சுற்றுச்சூழல் கல்வியை மாணவர்களுக்கு வழங்குகின்றன. இருப்பினும் மக்கள்தொகை அதிகரிப்பு தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றால் சுற்றுச்சூழல் மாசுபாடு அடைகிறது.

கூடலுார் நகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஆறு உள்ளிட்ட பிற நீர்நிலைகளில் கலக்கின்றன. இதனால் நீரின் தரமும் நீர்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. மேலும் குப்பையில் இருந்து வெளியேறும் புகை, துர்நாற்றம் மனிதனின் வாழ்நாளை குறைத்து விடுகின்றன.

இதற்கு முழுமையான தீர்வு என்பது மரங்களை அதிகமாக வளர்ப்பது தான். கூடலுாரில் சோலைக்குள் கூடல் அமைப்பினர் சில ஆண்டுகளாக தொடர்ந்து மரங்கள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கூடலுார் கார்டன் சிட்டி ரோட்டரி சங்கத்தினர் செயற்கை அடர் காடுகள் (மியாவாக்கி) உருவாக்கும் பணியை துவக்கியுள்ளனர்.

கூடலுாரில் முதல் முயற்சியாக அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள 60 சென்ட் நிலத்தில் 3 அடி இடைவெளி விட்டு 2500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. சொட்டு நீர்ப்பாசனத்தில் ரோட்டரி சங்கத்தினர் தொடர்ந்து பராமரிக்கின்றனர். இதேபோல் பல இடங்களில் செயற்கை அடர்காடுகள் உருவாக்குவதன் மூலம் மழைப்பொழிவை அதிகப்படுத்தி சுற்றுச்சூழலையும் பாதுகாத்து மாசில்லா கூடலுாரை உருவாக்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X