தமிழ்நாடு

மணிமுக்தா அணை நிரம்பியதால் விவசாயிகள்... மகிழ்ச்சி புதிய ஷெட்டர் வழியாக ஆற்றில் தண்ணீர் திறப்பு

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் 34 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பியதால் அணை பாதுகாப்பு கருதி புதிய ெஷட்டர் வழியாக ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சியின் குறுக்கே மணிமுக்தா அணை உள்ளது. இந்த அணைக்கு கல்வராயன்மலை பகுதியில் பெய்யும் மழை நீர், மணி மற்றும் முக்தா ஆறுகள் வழியாக வருகிறது.மேலும், மூரார்பாளையம்
 மணிமுக்தா அணை நிரம்பியதால் விவசாயிகள்... மகிழ்ச்சி    புதிய ஷெட்டர் வழியாக ஆற்றில் தண்ணீர் திறப்பு

கள்ளக்குறிச்சி : சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் 34 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பியதால் அணை பாதுகாப்பு கருதி புதிய ெஷட்டர் வழியாக ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சியின் குறுக்கே மணிமுக்தா அணை உள்ளது. இந்த அணைக்கு கல்வராயன்மலை பகுதியில் பெய்யும் மழை நீர், மணி மற்றும் முக்தா ஆறுகள் வழியாக வருகிறது.மேலும், மூரார்பாளையம் பாப்பாங்கால் ஓடையும் அணைக்கு நீர்வரத்தாக உள்ளது.

இந்த அணையில் சேமிக்கப்படும் நீரின் மூலம் சுற்று வட்டாரத்தில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.பாசன வாய்க்கால் மூலம் தண்ணீர் திறப்பதன் மூலம் பழைய பாசனத்தைச் சேர்ந்த 1,243 ஏக்கர், புதிய பாசனத்தைச் சேர்ந்த 4,250 ஏக்கர் என மொத்தம் 5,493 ஏக்கர் பரப்பிலான விளை நிலங்கள் பயன்பெறுகிறது.

ஆற்றில் உள்ள 4 அணைக்கட்டுகள் மூலம் பல்லகச்சேரி, சித்தலுார், உடையநாச்சி, கூத்தக்குடி ஆகிய ஏரிகள் நிரம்பும். மேலும், கொங்கராபாளையத்தில் உள்ள தடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் அணையின் நீர்மட்டம் உயரத் துவங்கியது. 36 அடி கொண்ட அணையின் மொத்த கொள்ளளவான 736.96 மில்லியன் கனஅடியில், தற்போது, 34 அடி உயர்ந்து 590 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியுள்ளது.அணைக்கு விநாடிக்கு 130 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்ததால், பாதுகாப்பு கருதி புதிய ெஷட்டர் வழியாக அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அப்படியே திறக்கப்பட்டது.

கடந்த ஆண்டைப் போல தற்போதும் மணிமுக்தா அணை விரைவில் நிரம்பியதால் சுற்று வட்டார பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.எச்சரிக்கைமேலும், கனமழை பெய்ய இருப்பதால், அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் மணிமுக்தா ஆற்றில் எப்போது வேண்டுமானாலும் அதிகளவு தண்ணீர் திறக்கப்படும்.

இதனால், ஆற்றின் கரைப்பகுதியை ஒட்டியவாறு விளைநிலம் வைத்துள்ள விவசாயிகள் தங்களது கால்நடைகளை கரைப்பகுதியில் கட்ட வேண்டாம். சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை குளிப்பதற்காக ஆற்றுக்கு அனுப்ப வேண்டாம் என சுற்று வட்டார கிராமங்களில் வருவாய்துறை சார்பில் 'தண்டோரா' மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X