சென்னை: சென்னையில் இன்று (நவ.,08), பெட்ரோல் லிட்டருக்கு 101.40 ரூபாய், டீசல் லிட்டருக்கு 91.43 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. பெட்ரோல், டீசல் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெரும்பாலான நகரங்களில், ஒரு லிட்டர் விலை, 100 ரூபாயைத் தாண்டி உயர்ந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக, மத்திய அரசு அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி, ஐந்து ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில், 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததையடுத்து பெட்ரோல், டீசல் விலை குறைந்தது.
சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் ரூ.101.40 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.91.43 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று(நவ.,08) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி, நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE