பொது செய்தி

தமிழ்நாடு

பரப்பலாறு அணையில் உபரி நீர் வெளியேற்றம்; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

Added : நவ 08, 2021
Share
Advertisement
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. நங்காஞ்சி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஒட்டன்சத்திரம் மலைப்பகுதியில் உள்ள பரப்பலாறு அணையின் மொத்த உயரம் 90 அடி. அணைப்பகுதியில் நேற்று பலத்த மழை பெய்ததால் ஒரே நாளில் நீர்மட்டம் 7 அடி உயர்ந்தது. நேற்று

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. நங்காஞ்சி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் மலைப்பகுதியில் உள்ள பரப்பலாறு அணையின் மொத்த உயரம் 90 அடி. அணைப்பகுதியில் நேற்று பலத்த மழை பெய்ததால் ஒரே நாளில் நீர்மட்டம் 7 அடி உயர்ந்தது. நேற்று மாலை 4:30 மணியளவில் 87 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது

செயற்பொறியாளர் கோபி, தாசில்தார் முத்துசாமி, உதவி பொறியாளர் உதயகுமார் ஆகியோர் உபரி நீரை திறந்து விட்டனர். அணைக்கு விநாடிக்கு 152 கன அடி நீர் வரத்து உள்ள நிலையில் விநாடிக்கு 101 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. வெளியேற்றப்படும் நீர் சத்திரப்பட்டி, முத்துபூபாளசமுத்திரம் மற்றும் விருப்பாச்சி பெருமாள்குளத்திற்கு செல்கிறது. மேலும் நங்காஞ்சி ஆற்றங்கரையோர பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X