பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்..

Added : நவ 08, 2021
Share
Advertisement
* லாட்டரி விற்றவர் கைதுவடமதுரை: மணப்பாறை செவலுார் நல்லதம்பி 50, சுக்காவளி ரங்கநாதன் 35, அய்யலூர் கடவூர் ரோடு பிரிவு அருகே லாட்டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் நல்லதம்பியை கைது செய்தனர். ரங்கநாதன் தப்பி ஓடிவிட்டார். ஏற்கனவே லாட்டரி வழக்கில் தேடப்பட்டு வந்தவர் நல்லதம்பி என்பது குறிப்பிடத்தக்கது.* நால்வருக்கு குண்டாஸ்திண்டுக்கல்:

* லாட்டரி விற்றவர் கைது

வடமதுரை: மணப்பாறை செவலுார் நல்லதம்பி 50, சுக்காவளி ரங்கநாதன் 35, அய்யலூர் கடவூர் ரோடு பிரிவு அருகே லாட்டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் நல்லதம்பியை கைது செய்தனர். ரங்கநாதன் தப்பி ஓடிவிட்டார். ஏற்கனவே லாட்டரி வழக்கில் தேடப்பட்டு வந்தவர் நல்லதம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

* நால்வருக்கு குண்டாஸ்

திண்டுக்கல்: அனுமந்தராயன்கோட்டையில் ஸ்டீபன் என்பவரை தலையை துண்டித்து கொலை செய்த வழக்கில் 12 பேர் கைதாகினர். இதில் நேற்று முன்தினம் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைதான நிலையில், நேற்று (நவ.7) மருதீஸ்வரன் 30, தேனி மணிகண்டராஜன் 30, உத்தமபாளையம் ராம்குமார் 25, அய்யன்கோட்டை சங்கரபாண்டி 26 ஆகியோரையும் எஸ்.பி.,ஸ்ரீனிவாசன் பரிந்துரையின் பேரில் குண்டாஸில் கைது செய்ய கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார்.

* சூதாடிய 12 பேர் கைது

வடமதுரை: தென்னம்பட்டி அடுத்த ஆண்டிபட்டி பகுதியில் வடமதுரை எஸ்.ஐ., பிரபாகரன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அங்குள்ள மந்தை குளத்தில் சூதாடிக் கொண்டிருந்த மணிமாறன் 37, ராஜா 38, காளீஸ்வரன் 23, தான்தோன்றி 32, லட்சுமணன் 32, தர்மராஜ் 51, மணிமுருகன் 35 உட்பட 12 பேரை கைது செய்தனர். ரூ.1,200 பறிமுதல் செய்தனர்.

கொடியேற்று விழா

சின்னாளபட்டி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நவம்பர் புரட்சி தின விழா நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் முருகன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட துணைத்தலைவர் பால்ராஜ் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் பாண்டியராஜன் வரவேற்றார். கொடியேற்றி வைத்து நிர்வாகிகள் விழா நோக்கம் குறித்து பேசினர்.

*தொழிலாளி பலி

வேடசந்தூர்: திண்டுக்கல் கரிசல்பட்டியைச் சேர்ந்த தாமஸ்ராஜ் 23. இவர் விட்டல்நாயக்கன்பட்டி தனியார் நுாற்பாலையில் வேலை பார்த்தார். நேற்று முன்தினம் இரவு டூவீலரில் வேடசந்துார் சென்ற போது எதிர்திசையில் வந்த மண் அள்ளும் இயந்திரம் வாகனத்தில் மோதி உயிரிழந்தார். வேடசந்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X