பொது செய்தி

தமிழ்நாடு

வகுப்பறையை ஆக்கிரமித்த கொரோனா முகாம் படுக்கைகள்; இடமின்றி மாணவர்கள் தவிப்பு

Added : நவ 08, 2021
Share
Advertisement
கூடலுார் : லோயர்கேம்ப் அரசு துவக்கப்பள்ளி வகுப்பறைக்குள் கொரோனா முகாம் படுக்கைகள் உள்ளதால் போதிய இடமின்றி தவிக்கும் மாணவர்கள் தொடர் மழையால் கூடுதல் சிரமத்தை அனுபவிக்கின்றனர்.2020ல் கொரோனா தீவிரமாக பரவியது. அப்போது கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களை பரிசோதித்து காய்ச்சல் இருந்தவர்களை லோயர்கேம்ப் அரசு துவக்கப்பள்ளி முகாமில் தங்க வைத்தனர். இங்கு 100 படுக்கைகளுடன்

கூடலுார் : லோயர்கேம்ப் அரசு துவக்கப்பள்ளி வகுப்பறைக்குள் கொரோனா முகாம் படுக்கைகள் உள்ளதால் போதிய இடமின்றி தவிக்கும் மாணவர்கள் தொடர் மழையால் கூடுதல் சிரமத்தை அனுபவிக்கின்றனர்.

2020ல் கொரோனா தீவிரமாக பரவியது. அப்போது கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களை பரிசோதித்து காய்ச்சல் இருந்தவர்களை லோயர்கேம்ப் அரசு துவக்கப்பள்ளி முகாமில் தங்க வைத்தனர். இங்கு 100 படுக்கைகளுடன் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டது.அதன்பின் முகாம் விலக்கி கொண்டபின் 100 படுக்கைகளை வகுப்பறைக்குள் வைத்து வருவாய்த்துறையினர் பூட்டி சென்றனர்.

தற்போது பள்ளி திறக்கப்பட்டதால் வகுப்பறைக்குள் மாணவர்கள் செல்ல முடியவில்லை. வராண்டாவில் அமர்ந்து படிக்கின்றனர். சில நாட்களாக பெய்யும் மழையால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் திருமாவளவன் வருவாய் துறையினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

வகுப்பறையிலுள்ள படுக்கைகளை யார் அகற்றுவது என்பதில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறைக்கு இடையேயுள்ள பிரச்னையால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கலெக்டர் முரளீதரன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X