ஓடையில் நீர் செல்வதில் சிக்கல்; எரியோட்டில் பள்ளிக்கு பாதிப்பு

Added : நவ 08, 2021
Share
Advertisement
எரியோடு : எரியோடு கவுண்டன்குளம் ஓடையில் நீர் செல்வதில் சிக்கல் இருப்பதால் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாதிப்பு ஏற்படுகிறது.எரியோட்டில் வேடசந்தூர் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. பள்ளியின் கிழக்கு பகுதி எல்லையில் கவுண்டன் குளம் ஓடை செல்கிறது. கொங்கர்குளம் மற்றும் பள்ளியின் மேற்கு பகுதி விளைநிலங்களில் பெய்யும் மழை நீர் வழிந்து

எரியோடு : எரியோடு கவுண்டன்குளம் ஓடையில் நீர் செல்வதில் சிக்கல் இருப்பதால் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

எரியோட்டில் வேடசந்தூர் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. பள்ளியின் கிழக்கு பகுதி எல்லையில் கவுண்டன் குளம் ஓடை செல்கிறது. கொங்கர்குளம் மற்றும் பள்ளியின் மேற்கு பகுதி விளைநிலங்களில் பெய்யும் மழை நீர் வழிந்து இந்த ஓடை வழியே கவுண்டன் குளத்திற்கும், மறுகாலில் பண்ணைப்பட்டி, மத்தனம்பட்டி என பயணிக்கும்.

இந்த ஓடையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த மராமரத்து பகுதியில் பள்ளி அருகில் போதுமான ஆழத்திற்கு துார் வாரியுள்ளனர்.ஆனால் அடுத்த சில நுாறு மீட்டர்களில் ஓடை தடைத்தில் பாறைகள் இருக்கும் பகுதியில் சரிவர பணி நடக்கவில்லை. இதனால் இந்த ஓடையில் நீர் தடையின்றி செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது.

சில நேரம் பள்ளி நுழைவாயில் வரையும் தண்ணீர் தேங்குகிறது. பள்ளிக்குள் அதிகளவில் ஊற்று நீர் கிளம்பி மைதானம் சகதி காடாக மாறுகிறது.கடந்த மாதம் ஓடை கரையில் உடைப்பு ஏற்பட்டு பள்ளிக்குள் நீர் புகுந்தது. இங்குள்ள ஓடையில் நீர் எளிதாக கடந்து செல்லும் வகையில் சீரமைப்பு பணி செய்ய அரசு முன்வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X