சென்னையில் நேற்றிரவு விட்டு விட்டு கனமழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் நேற்றிரவு விட்டு விட்டு கனமழை

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021
Share
சென்னையில்: சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு விட்டு விட்டு கனமழை பெய்தது.கடந்த சனியன்று இரவு சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாலைகளில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து வெகுவாக

சென்னையில்: சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு விட்டு விட்டு கனமழை பெய்தது.



latest tamil news


கடந்த சனியன்று இரவு சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாலைகளில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.


latest tamil news


இந்நிலையில் நேற்றிரவு மழை சற்று குறைந்தாலும், நகரின் பல பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்தது. நகரின் பல பகுதிகளில் தேங்கியுள்ள நீரினை ராட்சத பம்பு கொண்டு அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மழை நீர் தேங்கிய பகுதிகளில் மக்கள் ரப்பர் படகுகள் மூலம் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மேலும் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X