தமிழ்நாடு

குற்ற நடவடிக்கைகளில் தொடர்பு உடையவர்களை கண்காணிக்க வேண்டியது அவசியம்

Added : நவ 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால் முன்விரோதங்கள், சந்தேக நபர்கள், குற்ற நடவடிக்கைகளில் தொடர்பு உடையவர்களை கண்காணிக்க வேண்டியது அவசியம்.மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருந்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. ஆகஸ்ட் மாதம் திண்டுக்கல் பர்னிச்சர் கடை உரிமையாளரை 12 பேர் கொண்ட கும்பல்
குற்ற நடவடிக்கைகளில் தொடர்பு உடையவர்களை கண்காணிக்க வேண்டியது அவசியம்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால் முன்விரோதங்கள், சந்தேக நபர்கள், குற்ற நடவடிக்கைகளில் தொடர்பு உடையவர்களை கண்காணிக்க வேண்டியது அவசியம்.

மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருந்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. ஆகஸ்ட் மாதம் திண்டுக்கல் பர்னிச்சர் கடை உரிமையாளரை 12 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது.

செப்டம்பரில் தி.மு.க., பிரமுகர் இருவருக்கு அரிவாள் வெட்டு, குட்டியபட்டி அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை, பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் மற்றும் அதே நாளில் வாலிபர் ஒருவரும் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார்.

அதே போல் கத்தியை காட்டி வணிக வளாங்களுக்குள் மிரட்டிய வாலிபர், மகனே தந்தையை கொன்ற விவகாரம், பைனான்சியர் மர்ம மரணம், நேற்று முன்தினம் ஒரே நாளில் ஊராட்சி தலைவர் உட்பட 4 பேருக்கு கத்திகுத்து, கரூர் சாலையில் வழிப்பறி, நேற்று திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் ஒருவர் கொலை என குற்றங்கள் அதிகரித்து வருகிறது.

'பூட்டு' நகரம் 'கொலை' நகரமாக மாறி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, குற்ற நடவடிக்கைகளில் தொடர்பு உடையவர்களளை கண்காணித்து போலீசார் ஏதேனும் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-நவ-202110:45:11 IST Report Abuse
அப்பு கத்தி நிறம் கருப்பு. ரத்த நிறம் சிவப்பு. உங்க சித்தரிப்பு செம டாப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X