பொது செய்தி

தமிழ்நாடு

அவசர மருத்துவ செலவுக்கு அனைவருக்கும் 'ஹெல்த் பாலிசி'; 'கோவிட் - 19' பாதிப்பால் விழிப்புணர்வு

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
யார், எவ்வளவு தொகைக்கு மருத்துவ காப்பீடு எடுக்க வேண்டும் என ஆலோசனை கூறும், நிதி ஆலோசகர் சிவகாசி மணிகண்டன்: 'கோவிட் - 19' பாதிப்பு அனைவரது மத்தியிலும் மருத்துவ காப்பீடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.திடீர் மருத்துவ செலவு வரும் போது உறவினர்கள், நண்பர்களிடம் கடன் வாங்குவர். அந்த கடனிலிருந்து மீண்டு வர, பல ஆண்டுகள் ஆகின்றன. சேமிப்பையும்,



யார், எவ்வளவு தொகைக்கு மருத்துவ காப்பீடு எடுக்க வேண்டும் என ஆலோசனை கூறும், நிதி ஆலோசகர் சிவகாசி மணிகண்டன்: 'கோவிட் - 19' பாதிப்பு அனைவரது மத்தியிலும் மருத்துவ காப்பீடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.



latest tamil news




திடீர் மருத்துவ செலவு வரும் போது உறவினர்கள், நண்பர்களிடம் கடன் வாங்குவர். அந்த கடனிலிருந்து மீண்டு வர, பல ஆண்டுகள் ஆகின்றன. சேமிப்பையும், முதலீட்டையும் அவசர மருத்துவ செலவுக்கு பயன்படுத்துபவர்கள் மீண்டும் அந்த சேமிப்பையும், முதலீட்டையும் சேர்க்க பல ஆண்டுகள் பாடுபட வேண்டியிருக்கிறது. பலர், தனக்கு மட்டும், 'ஹெல்த் பாலிசி' எடுத்து விட்டு, வீட்டில் இருக்கும் குடும்ப தலைவி, பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு தேவையில்லை என்று நினைத்து, எடுக்காமல் விட்டு விடுகின்றனர்.

மனைவி அல்லது பிள்ளைகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், செலவு செய்யப்போவது குடும்ப தலைவர் தான் என்பதை நினைவில் வைத்து, குடும்ப உறுப்பினர்கள் அனைவரது பெயரிலும் ஹெல்த் பாலிசி எடுக்க வேண்டும். விபத்து, நோய் பாதிப்பால் சில சமயங்களில் தற்காலிக அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

இந்த நிலைமையை சமாளிக்கவும், மருத்துவ பாலிசிகள் இருக்கின்றன. உடல் நலம் பாதிப்பால் சிறிது காலம் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், சம்பள இழப்பையும் சில பாலிசிகள் ஈடு செய்யும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது, இதர செலவுக்கு தேவையான தொகை, தீவிர நோய்க்கான சிகிச்சை போன்றவற்றுக்கும் இருக்கின்றன.

அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய மருத்துவ காப்பீட்டை எடுத்துக் கொள்ளலாம். எவ்வளவு தொகை, 'பிரீமியம்' கட்ட முடியுமோ, அந்த அளவு தொகைக்கு பாலிசியை எடுத்துக் கொள்வது நல்லது.பாலிசியின் நிபந்தனையை பொறுத்து, குறைந்தபட்சம் 24 மணி நேரம் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் மட்டுமே 'க்ளெய்ம்' கிடைக்கும்;


latest tamil news




எனவே, பாலிசியின் நிபந்தனைகளை சரியாக பின்பற்றுவது மிக முக்கியம்.அனைத்து செலவுகளுக்கும் மருத்துவ காப்பீட்டில் இழப்பீடு கிடைக்காது. நிபந்தனைகளுக்கு உட்பட்டு தான் செலவு தொகை அனுமதிக்கப்படும். உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் நோய்க்கு மருத்துவமனையில் பாலிசி எடுத்து, சிறிது காலத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் க்ளெய்ம் கிடையாது.

ஆனால், நிபந்தனைக்கு உட்பட்டு சில பாலிசிகளில் ஏற்கனவே உள்ள நோய்க்கு பாலிசி எடுத்து, சில ஆண்டுகள் கழித்து சிகிச்சை எடுத்துக் கொண்டால், க்ளெய்ம் பெற முடியும்.பாலிசி விபர புத்தகத்தில் எந்தெந்த சிகிக்சைக்கு எல்லாம் இழப்பீடு கிடைக்கும், கிடைக்காது என்கிற பட்டியல் இருக்கும். அதை முன்கூட்டியே அறிந்து பாலிசி எடுப்பது நல்லது!

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-நவ-202118:41:23 IST Report Abuse
சம்பத் குமார் 1). மருத்துவம் கல்வி , தண்ணீர் போன்றவை அரசாங்கம் இலவசமாக மக்களுக்கு வழங்க வேண்டும்.2). வேனும் என்றால் மாதம் ரூ 50 அலல்து ரூ 100 என அதிகபட்ச தொகையாக பாலிசி நிர்ணயம் செய்து மக்களுக்கு மருத்துவம் இலவசமாக வழங்க வேண்டும். நன்றி வணக்கம் ஐயா
Rate this:
Cancel
பூபதி - திம்மநாயக்கன்பட்டி, நாமக்கல்,இந்தியா
08-நவ-202116:01:32 IST Report Abuse
பூபதி ஐயா நம்ம ஊர்ல இந்தத் சிகிச்சைக்கு இவ்வளுவு தான் செலவு ஆகுமுன்னு சொல்ல முடியுமா ? மருத்துவக்காப்பீட்டுகு உச்சவரம்பு உள்ளது, அதை நம்பி நாம் மருத்துவமனைக்கு போனால் அப்புறம் நாம் நம் கையில் இருந்து பணத்தை கட்ட வேண்டும். அப்புறம், மருத்துவக்காப்பீட்டு நிறுவனம் தான் வளர்கிறது.
Rate this:
Cancel
yavarum kelir - yadhum vore ,இந்தியா
08-நவ-202111:35:39 IST Report Abuse
yavarum kelir பாலிசி கிளைம் பற்றிய புகாரை பாலிசிதாரர்கள் IRDAI எனப்படும் இந்திய காப்பீடு ஆணையத்திற்கோ அல்லது இன்சூரன்ஸ் ஆம்புட்ஸ்மேன் அலுவலகத்திற்கோ அனுப்பினால் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X