பொது செய்தி

தமிழ்நாடு

16 ஆண்டுக்கு பிறகு மறுகால் பாய்ந்த செவரக்கோட்டை மதகு அணை

Added : நவ 08, 2021
Share
Advertisement
காரைக்குடி : கல்லல் அருகேயுள்ள செவரக்கோட்டை மதகு அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரில் குளித்த மக்கள் கூட்டத்தால் மதகுஅணை சுற்றுலாத்தலம் போல காட்சியளிக்கிறது.செவரக்கோட்டை ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. 300 ஏக்கருக்கும் அதிகமாக விவசாயம் நடக்கிறது. இங்குள்ள மணிமுத்தாறு அணைக்கட்டிலிருந்து வெளியேறும் தண்ணீர்,

காரைக்குடி : கல்லல் அருகேயுள்ள செவரக்கோட்டை மதகு அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரில் குளித்த மக்கள் கூட்டத்தால் மதகுஅணை சுற்றுலாத்தலம் போல காட்சியளிக்கிறது.

செவரக்கோட்டை ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. 300 ஏக்கருக்கும் அதிகமாக விவசாயம் நடக்கிறது. இங்குள்ள மணிமுத்தாறு அணைக்கட்டிலிருந்து வெளியேறும் தண்ணீர், செவரக்கோட்டை, பொய்யலுார், எஸ்.ஆர்.பட்டினம், தேவகோட்டை வழியாக தொண்டி வரை செல்கிறது.செவரக்கோட்டை கண்மாய் 30 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 2005ல் பெய்தகனமழையால் செவரக்கோட்டை கண்மாய் நிரம்பியது.

தற்போது பெய்து வரும் கனமழையால் 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கண்மாய் நிறைந்துள்ளது. கண்மாய் நிறைந்து மணிமுத்தாறு மதகு அணை வழியாக மறுகால் பாய்கிறது. மதகுகளில் இருந்து தண்ணீர் வெளியாவதை அறிந்த கிராம மக்கள் மற்றும் கல்லல் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள் அணைக்கட்டில் ஆனந்த குளியல் போட கூட்டமாக வந்து செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X