பொது செய்தி

தமிழ்நாடு

பாம்பன் பாலத்தில் இரும்பு பிளேட் சேதம்

Added : நவ 08, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : பாம்பன் பாலத்தில் இரும்பு பிளேட், தடுப்பு சுவர் சேதமடைந்து அதிர்வு ஏற்படுகிறது.1988 அக்.,2ல் பாம்பன்பாலம் திறக்கப்பட்டது. தினமும் ஏராளமான வாகனத்தில் மக்கள் ராமேஸ்வரம் வருகின்றனர். 2013ல் இப்பாலத்தில் சேதமடைந்த தடுப்பு சுவர், துாணில் இருந்த விரிசல், மின் விளக்கு கம்பங்கள் சரி செய்யப்பட்டது. பாலம் நடுவில் உள்ள சிமென்ட் சிலாப்பை இணைக்கும் பிங்கர் ஜாய்ன்ட்
 பாம்பன் பாலத்தில் இரும்பு பிளேட் சேதம்

ராமேஸ்வரம் : பாம்பன் பாலத்தில் இரும்பு பிளேட், தடுப்பு சுவர் சேதமடைந்து அதிர்வு ஏற்படுகிறது.

1988 அக்.,2ல் பாம்பன்பாலம் திறக்கப்பட்டது. தினமும் ஏராளமான வாகனத்தில் மக்கள் ராமேஸ்வரம் வருகின்றனர். 2013ல் இப்பாலத்தில் சேதமடைந்த தடுப்பு சுவர், துாணில் இருந்த விரிசல், மின் விளக்கு கம்பங்கள் சரி செய்யப்பட்டது. பாலம் நடுவில் உள்ள சிமென்ட் சிலாப்பை இணைக்கும் பிங்கர் ஜாய்ன்ட் இரும்பு பிளேட் புதுப்பித்தனர். புதுப்பித்த சில ஆண்டிலேயே இரும்பு பிளேட், தடுப்பு சுவர்கள் சேதமடைந்ததால் 2015, 2017ல் புதுப்பித்தனர்.

இந்நிலையில் மீண்டும் பாலத்தில் பல இடத்தில் தடுப்பு சுவர் உடைந்து கிடப்பதால், பாலத்தில் நின்று கடல் அழகை ரசிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. பாலத்தில் பிங்கர் ஜாய்ன்ட் இரும்பு பிளேட் இணைப்பில் இருந்து விலகி, இரும்பு போல்ட் வெளியில் நீண்டு உள்ளதால்வாகன டயர்கள் சேதமடைகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X