பொது செய்தி

தமிழ்நாடு

திருவாடானையில் பயிர்கள் மூழ்கின

Added : நவ 08, 2021
Share
Advertisement
திருவாடானை : திருவாடானை, தொண்டியில் பெய்த பலத்த மழையால் நெற்பயிர்கள் மூழ்கின. வீடுகள் இடிந்தன. மரங்கள் சாய்ந்தன.திருவாடானை தாலுகாவில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதில் குஞ்சங்குளம், ஆதியூர், அஞ்சுகோட்டை, கிளியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வயல்களில் மழை நீர் தேங்கியதால் நெல் பயிர்கள் மூழ்கின. திருவாடானை தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள பழமையான மரம்,

திருவாடானை : திருவாடானை, தொண்டியில் பெய்த பலத்த மழையால் நெற்பயிர்கள் மூழ்கின. வீடுகள் இடிந்தன. மரங்கள் சாய்ந்தன.

திருவாடானை தாலுகாவில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதில் குஞ்சங்குளம், ஆதியூர், அஞ்சுகோட்டை, கிளியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வயல்களில் மழை நீர் தேங்கியதால் நெல் பயிர்கள் மூழ்கின. திருவாடானை தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள பழமையான மரம், எஸ்.பி.பட்டினம் பள்ளிவாசல் அருகே உள்ள மரங்கள் சாய்ந்தது.

சிநேகவல்லிபுரத்தை சேர்ந்த மனோஜாபானு 45, பண்ணவயலை சேர்ந்த மலைராஜ் 65, ஆகியோர்களின் வீடுகள் சேதமடைந்தது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆர்.டி.ஓ. சேக்மன்சூர், தாசில்தார் செந்தில்வேல்முருகன் பார்வையிட்டனர்.வீடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.4100, மண்ணெண்ணெய், வேஷ்டி, சேலை வழங்கப்பட்டது. நரிக்குறவர்கள் தங்குவதற்கு கட்டப்படும் கட்டுமான பணிகளை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X