சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மழையால் இடிந்த வீடு; உயிர் தப்பிய குழந்தைகள்

Added : நவ 08, 2021
Share
Advertisement
காளையார்கோவில் : காளையார்கோவில் அருகே அதப்படக்கி அருகே கொல்லவயல் கிராமத்தில் கனமழையால் வீடு இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்தவர்கள் தப்பினர்.கொல்லவயல் கிராமத்தை சேர்ந்த சேகர் மனைவி அமுதா 35, இவரது கணவர் சேகர் இறந்துவிட்டார். அமுதாவும், இரு குழந்தைகளும் கிராமத்தில் உள்ள ஓட்டு வீட்டில் குடியிருந்தனர். விவசாய கூலி தொழிலாளியான இவரது வீடு கனமழையால் முழுவதும்

காளையார்கோவில் : காளையார்கோவில் அருகே அதப்படக்கி அருகே கொல்லவயல் கிராமத்தில் கனமழையால் வீடு இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்தவர்கள் தப்பினர்.

கொல்லவயல் கிராமத்தை சேர்ந்த சேகர் மனைவி அமுதா 35, இவரது கணவர் சேகர் இறந்துவிட்டார். அமுதாவும், இரு குழந்தைகளும் கிராமத்தில் உள்ள ஓட்டு வீட்டில் குடியிருந்தனர். விவசாய கூலி தொழிலாளியான இவரது வீடு கனமழையால் முழுவதும் இடிந்தது. இடியும் சத்தம் கேட்டவுடன் அமுதாவும், அவரது இரு குழந்தைகளும் வீட்டை விட்டு வெளியே வந்ததால் உயிர் தப்பினர். வீட்டிலிருந்த அனைத்துப்பொருட்களும் சேதமடைந்தது.

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே மருதிப்பட்டியில் நவ. 6 ம் தேதி இரவு முழுவதும் மழை பெய்தது. இதில் அதே ஊரை சேர்ந்த சின்னையா என்பவரது கூரை வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சுவர் இடிந்ததில் வீட்டிலிருந்த பீரோ உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. ஊராட்சித்தலைவர் வெண்ணிலா இடிந்த வீட்டை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X