பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரத்தில் மீன்வரத்து குறைவு

Added : நவ 08, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : 25 நாட்களுக்கு பின் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களுக்கு எதிர்பார்த்த மீன்வரத்து கிடைக்கவில்லை.இலங்கை கடற்படை தாக்குதல், டீசல் விலை உயர்வால் ராமேஸ்வரம் மீனவர்கள் அக்.,12 முதல் வேலைநிறுத்தம் செய்தனர். மீனவர்கள் வருவாய் இன்றி சிரமப்பட்டனர்.இந்நிலையில் 3 நாட்களுக்கு முன் டீசலுக்கு ரூ.10 குறைந்ததால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 25 நாட்களுக்கு பின் நவ.,6

ராமேஸ்வரம் : 25 நாட்களுக்கு பின் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களுக்கு எதிர்பார்த்த மீன்வரத்து கிடைக்கவில்லை.

இலங்கை கடற்படை தாக்குதல், டீசல் விலை உயர்வால் ராமேஸ்வரம் மீனவர்கள் அக்.,12 முதல் வேலைநிறுத்தம் செய்தனர். மீனவர்கள் வருவாய் இன்றி சிரமப்பட்டனர்.இந்நிலையில் 3 நாட்களுக்கு முன் டீசலுக்கு ரூ.10 குறைந்ததால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 25 நாட்களுக்கு பின் நவ.,6 ல் 650 விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள்வழக்கம் போல் இந்திய, இலங்கை எல்லையில் மீன்பிடித்த போது, அங்கு கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் மீன்பிடிக்க விடாமல் விரட்டினர்.இதனால் கடலில் வீசிய வலைகளை இழுத்து வைத்து வேறு பகுதியில் மீன்பிடிக்க சென்றதில், எதிர்பார்த்த மீன்வரத்து கிடைக்காமல், ஏமாற்றத்துடன் நேற்று ராமேஸ்வரம் கரை திரும்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X