தமிழ்நாடு

மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு அதிகரிப்பு; நெல் சாகுபடி செய்த விவசாயிகள் குமுறல்

Added : நவ 08, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் குமுறுகின்றனர்.மாவட்டத்தில் இதுவரை 803.54 மி.மீ., மழை பெய்துள்ளது. இதில் வடகிழக்கு பருவமழை மட்டும் 353.76 மி.மீ., பதிவாகியுள்ளது. இதுவரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 484 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 25 முதல் 50 நாள் பயிராக வளர்ந்துள்ளது.மாவட்டத்தில் 134 தொடக்க வேளாண்மை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் குமுறுகின்றனர்.

மாவட்டத்தில் இதுவரை 803.54 மி.மீ., மழை பெய்துள்ளது. இதில் வடகிழக்கு பருவமழை மட்டும் 353.76 மி.மீ., பதிவாகியுள்ளது. இதுவரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 484 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 25 முதல் 50 நாள் பயிராக வளர்ந்துள்ளது.மாவட்டத்தில் 134 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்மற்றும் 127 தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான யூரியா, காம்ப்ளக்ஸ், டி.ஏ.பி., பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

தற்போது, விவசாயிகளுக்கு அடி உரமாக தேவைப்படும் டி.ஏ.பி., நெற்பயிர் வளர்ச்சிக்கு தேவையான யூரியா உள்ளிட்ட அனைத்து உரங்களுக்கும் கடந்த பத்து நாட்களாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் உரம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

உரிய நேரத்தில் உரம் கிடைக்காவிட்டால் மகசூல் பாதிக்கும், என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நவ., மாதத்திற்கான உரம் இதுவரை வராத நிலையில் விவசாயிகள் குமுறுகின்றனர். முதல் களை, இரண்டாவது களை பறிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் உரம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

விவசாயி விஸ்வநாதன் 63, முதுனால், ராமநாதபுரம்: நான் ஒரு ஏக்கரில் நெல் விதைப்பு செய்துள்ளேன். அடியுரமாக டி.ஏ.பி., இட்டால் பயிர் மகசூல் நன்றாக கிடைக்கும். ஆனால் டி.ஏ.பி., கிடைக்காததால் சிறிதளவு கிடைத்த காம்ப்ளக்ஸ் உரத்தை பயன்படுத்துகிறேன், என்றார்.

விவசாயி ஏ.கார்த்திகைசாமி, ஆர்.காவனுார்: ஒன்றரை ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளேன். யூரியா, டி.ஏ.பி., உள்ளிட்ட அனைத்து உரங்களுக்கும் தட்டுப்பாடு உள்ளது. தனியார் கடைகளில் பெரிய விவசாயிகளுக்கு மட்டும், இருப்பதை கொடுக்கின்றனர்.எங்களைப்போன்ற சிறு விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. இதனால் யூரியா உரமிட முடியாதநிலையில் உள்ளேன், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X