பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கையில் மழை நீர் சூழ்ந்தது

Added : நவ 08, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை நகராட்சிப்பகுதியில் உள்ள ராமசாமி நகர், மீனாட்சிநகர், கே.பி.கே., நகர் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வீடுகளை விட்டு மக்கள் வெளியேற முடியவில்லை. நகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.சிவகங்கை அருகே கொட்டகுடி கண்மாய் நிரம்பி மறுகால்பாய்கிறது. இந்த தண்ணீர் மீனாட்சிநகர், ராமசாமிநகர், கே.பி.கே., நகர் பகுதிகளில்

சிவகங்கை : சிவகங்கை நகராட்சிப்பகுதியில் உள்ள ராமசாமி நகர், மீனாட்சிநகர், கே.பி.கே., நகர் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வீடுகளை விட்டு மக்கள் வெளியேற முடியவில்லை. நகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை அருகே கொட்டகுடி கண்மாய் நிரம்பி மறுகால்பாய்கிறது. இந்த தண்ணீர் மீனாட்சிநகர், ராமசாமிநகர், கே.பி.கே., நகர் பகுதிகளில் உள்ள 500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. இப்பகுதியில் முழங்கால் அளவிற்கு நீர் தேங்கி நிற்பதால் வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளது. அப்பகுதி மக்கள் அவசரத்திற்குவெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.நகராட்சியின் விரிவாக்கப்பகுதியான இப்பகுதிகளில் மழை நீர் வடிகால் இல்லாததால் மழை நீர்தேங்கியுள்ளது.

நகராட்சி நிர்வாகத்திடம் இப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.ஆர்.மஞ்சுளா, மீனாட்சி நகர்: எங்கள் பகுதியில் மழை நீர் தேங்கி வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. வீடுகளில் இருந்து வெளியில் செல்ல முடியாமல்தவித்து வருகிறோம். தொடர்ந்து மழை பெய்வதால் ஓடும் நீரில் பாம்புகள் வந்து விடுகிறது.அதிகாரிகளிடம் பல முறை புகார் கொடுத்தும் கண்டு கொள்ளவில்லை.ஆர்.உமா மகேஸ்வரி, ராமசாமிநகர்: எங்கள் பகுதியில் மழை பெய்தால் தினமும் எங்களுக்கு நரகம் தான். குழந்தைகள் வெளியே செல்ல முடியவில்லை. வீடுகளுக்கு முன்பு மழை நீர் தேங்கியுள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தினர் ரோடு அமைத்துள்ளனர். மழை நீர் வடிகால் அமைக்காததால் மழை நீர் சூழ்ந்துள்ளது.ஆர்.ராஜூ, மீனாட்சிநகர்: எங்கள் பகுதியில் வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.

ஆண்டு தோறும் இதே பிரச்னையால் தவித்து வருகிறோம். நகராட்சி அதிகாரிகளிடம்புகார் தெரிவித்தால் வரி செலுத்திவிட்டீர்களா என்கின்றனர். வரி செலுத்திய ரசீது உள்ளது. குடிநீர் இணைப்பு கேட்டு பணம் கட்டியுள்ளோம். இரவு நேரத்தில் வீடுகளில்விழித்திருந்து காவல் காப்பதே எங்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. குழந்தைகள், பெண்களுடன் வசிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம்.

நகரின் விரிவாக்கப்பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். மழை நீர் வடிகால்கள் அமைத்து மழை நீரை அப்புறப்படுத்திட விரைந்துநடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிகமாக மோட்டார் வைத்து அப்புறப்படுத்தினால் தொடர்ந்து மழை பெய்யும் காலத்தில் மீண்டும் அப்பகுதியை மழை நீர் சூழ்ந்து விடுகிறது.இதற்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X