சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பால் தூர்ந்த பாசனக்கால்வாய்; அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டம்

Added : நவ 08, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை அருகே வீரப்பட்டியில் கால்வாய் ஆக்கிரமிப்பால் துார்ந்து போனதால் தண்ணீர்கிடைக்காமல் 500 ஏக்கர் தரிசானது. இதனை கண்டித்து அரசு பஸ்சை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.ஷீல்டு கால்வாய் 2வது மடை மூலம் வீரப்பட்டி பகுதியில் உள்ள வலையங்குளம், கருங்காலி, ஆலங்கண்மாய்களுக்கு தண்ணீர் வரும்.இந்தாண்டு மழை காரணமாக அனைத்து கால்வாய் பகுதிகளிலும்

சிவகங்கை : சிவகங்கை அருகே வீரப்பட்டியில் கால்வாய் ஆக்கிரமிப்பால் துார்ந்து போனதால் தண்ணீர்கிடைக்காமல் 500 ஏக்கர் தரிசானது. இதனை கண்டித்து அரசு பஸ்சை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

ஷீல்டு கால்வாய் 2வது மடை மூலம் வீரப்பட்டி பகுதியில் உள்ள வலையங்குளம், கருங்காலி, ஆலங்கண்மாய்களுக்கு தண்ணீர் வரும்.இந்தாண்டு மழை காரணமாக அனைத்து கால்வாய் பகுதிகளிலும் உள்ள பாசன கண்மாய்களுக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வீரப்பட்டி பகுதிக்கு 1993 ல் தான் கடைசியாக பாசன நீர் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் 28 ஆண்டுகளாக இன்று வரை இப்பகுதிக்கு பாசன நீர் வழங்கவில்லை. கண்மாய்களுக்கு செல்லும் பாசன கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாகவும், துார்ந்து போனதாலும் தண்ணீர் வரவில்லை.

தற்போது பெரியாறு பாசன நீர் அனைத்துப்பகுதிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதால் தங்களது கண்மாய்களுக்கும் தண்ணீர் வரும் வகையில் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்ந்த கால்வாய்களை சீரமைக்க கேட்டு வீரப்பட்டி கிராம மக்கள் சிவகங்கையிலிருந்து கல்லராதினிப்பட்டி செல்லும் அரசு பஸ்சை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர்.

ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர்.சிவகங்கை தாசில்தார் தர்மலிங்கம், டி.எஸ்.பி., பால்பாண்டி ஆகியோர் கிராம மக்களிடம் பேசினர்.பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாசன கால்வாய் இருந்தால் தண்ணீர் வழங்குவதாக தெரிவித்தனர். தாசில்தார் தர்மலிங்கம் பாசன கால்வாய் இடங்களை பார்வையிட்டு2 நாட்களில் ஆக்கிரமிப்பு அகற்றி துார்ந்து போன கால்வாயை சீரமைத்து தருவதாக தெரிவித்ததையடுத்து போராட்டத்தினை கைவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X