பொது செய்தி

தமிழ்நாடு

வழிகாட்டி நிறுவனமாக பொறியியல் கல்லுாரி தேர்வு

Added : நவ 08, 2021
Share
Advertisement
திருப்புத்துார் : திருமயம் மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியை மத்திய கல்வித்துறை அமைச்சகம் சிறந்த புதுமையான முறையில் மாணவர்களை தயார்படுத்துவதில் வழிகாட்டி நிறுவனமாக தேர்வு செய்து உள்ளது.மத்திய அரசின் கல்வி அமைச்சகம் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் புதுமை கலாசாரத்தை உருவாக்க அமைப்புகளைஉருவாக்கியுள்ளது.இக்கல்லுாரியில் கடந்த 3

திருப்புத்துார் : திருமயம் மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியை மத்திய கல்வித்துறை அமைச்சகம் சிறந்த புதுமையான முறையில் மாணவர்களை தயார்படுத்துவதில் வழிகாட்டி நிறுவனமாக தேர்வு செய்து உள்ளது.

மத்திய அரசின் கல்வி அமைச்சகம் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் புதுமை கலாசாரத்தை உருவாக்க அமைப்புகளைஉருவாக்கியுள்ளது.இக்கல்லுாரியில் கடந்த 3 ஆண்டுகளாக இந்த அமைப்புகள் மூலம் பல புதுமை போட்டிகள், விரிவுரைத் தொடர்கள், தொழிற்பட்டறைகள், கருத்தரங்குகள், ஆன் லைன் அமர்வு தொடர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், தொழில் வெற்றியாளர்களுடனான கலந்துரையாடலை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் 5 நட்சத்திர அந்தஸ்து மற்றும் சிறந்த வழிகாட்டி நிறுவனமாக இக்கல்லுாரியை கல்வி அமைச்சகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு தேர்வு செய்துள்ளன.

தலைவர் பிளாரன்ஸ், இயக்குனர் ஜெய்சன் கே ஜெயபாரதன், முதல்வர் பாலமுருகன் ஆகியோர் செயல்பாடுகளை மேற்கொண்ட கல்லுாரி பேராசிரியர் ராதா தலைமையிலான குழுவிற்கு பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X